Apple : தற்போதைய தொழில்நுட்ப உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பமாக செயற்கை நுண்ணறிவு AI இருந்து வருகிறது. இனி தொழில்நுட்ப எதிர்காலம் செயற்கை நுண்ணறிவு தான் என்ற தோற்றம் உருவாகி மக்களும் அதனை நோக்கி வேகமாக பயணித்து வருகின்றனர்.
இதனால் பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களும் தங்கள் பயனர்களிடன் விருப்பத்திற்கேற்ப புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது. அதனை மேம்படுத்துவது என நகர்ந்து வருகின்றனர். இப்படியான சூழலில் ஆப்பிள் நிறுவனமும் தாங்கள் தயாரிக்கும் கருவிகளில் AI தொழில்நுட்ப பயன்பாடு குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொண்டுள்ளது.
ஆண்டு தோறும் , தங்கள் நிறுவன முக்கிய பங்குதாரர்களுடன் ஆப்பிள் தலைமை நிர்வாகி டிம் குக் (Tim Cook) தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அந்த ஆலோசனை கூட்டம் இன்று அமெரிக்கா, சான் பிரான்ஸிஸ்கோவில் நடைபெற்றது. அதில், ஆப்பிள் கருவிகளில் AI தொழில்நுட்பத்தை மேம்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக டிம் குக் தெரிவித்ததாக தனியார் செய்தி நிறுவனமான Reuters தங்கள் செய்தி தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், ஆப்பிள் பொருட்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்காகவும், பயனர்களின் சந்தேகங்களை தீர்க்கும் திறன்களிலும், AI தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டியுள்ளது என குறிப்பிட்டார். மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் போன்ற AI தொழில்நுட்ப போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் ஆப்பிள் AI ஐப் பயன்படுத்துவது சற்று மெதுவாக இருப்பதாக கருதப்படுகிறது. இதற்கு காரணம், ஆப்பிளின் தயாரிப்புகளில் AI தொழில்நுட்பமானது பயனர்கள் பயன்படுத்தாத போதும் கருவிகளில் பின்னர் செயல்படுகிறது என்று குக் கூறினார்.
இருந்தும் , ஆப்பிள்கருவிகளின் மூலம் இயங்கும் ஒவ்வொரு மேக்கும் (ஆப்பிள் MAC கணினி) ஒரு அசாதாரண திறன் கொண்ட AI இயந்திரம் ஆகும் என்றும், இன்று தொழில்நுட்ப சந்தையில் AI பயன்படுத்தும் சிறந்த கணினிகளில் நமக்கு நிகர் எதுவும் இல்லை. என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆப்பிள் நிறுவனத்தின் இன்னும் வெளிப்படையான AI அம்சங்கள் வெளியிடப்படும் என்றும் , ஆப்பிள் அதன் சாதனங்களில் தரவுத் தேடல் திறன்களை மேம்படுத்த AI ஐ மேம்படுத்துவது மிக முக்கியமாக உள்ளது என்றும் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்களுடன் ஆப்பிள் தலைமை நிர்வாகி டிம் குக் (Tim Cook) நடத்திய ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்தார்.
AFL-CIOஇன் (அமெரிக்க தேசியசங்க கூட்டமைப்பு) பெருநிறுவனங்கள் மற்றும் மூலதனச் சந்தைகளுக்கான துணை இயக்குநர் பிராண்டன் ரீஸ் கூறுகையில், AI நெறிமுறைகள் தொடர்பான வெளிப்படுத்தல் நடைமுறைகளை ஆப்பிள் மேம்படுத்தும் என்று நம்பிக்கை உள்ளது என்றும் , இந்த விஷயத்தில் ஆப்பிள் நிறுவனம் மற்ற தொழில்நுட்ப நிறுவனங்களை விட பின்தங்கியுள்ளது. ஆப்பிள், முன்மொழிவுக்கு எதிராக, அது வேகமாக வளர்ந்து வரும் AI துறையில் போட்டியிடுவதால், விரைவில் அதில் முக்கிய மாற்றம் கொண்டு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…
திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 21) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் 'உழவர் பேரியக்க மாநாடு'…
திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…
தெலங்கானா : 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர்…
ஜெய்சால்மர் : இன்று ஜிஎஸ்டி கவுன்சின் 55வது ஆலோசனை கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும்,…
ரஷ்யா: ரஷ்யா - உக்ரைன் இடையே ட்ரோன் தாக்குதல்கள் தினசரி நிகழ்வு என்றாலும், உக்ரைனில் இருந்து 1000 கிமீ தொலைவில்…