Apple MacBook : அதிரடி ஆஃபர்.! இந்தியாவில் விலை குறைந்த ஆப்பிள் மேக்புக்.! மாடல், விலை விவரம்..!

Apple MacBook : மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனம், தற்போது புதிய 13 இன்ச் மற்றும் 15 இன்ச் மேக்புக் ஏர் மாடல்களை மேம்படுத்தப்பட்ட M3 சிப்செட்களுடன் அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும், ஆப்பிள் M2 சிப் உடன் வரும் ஓல்டு ஜெனெரேஷன் மேக்புக் ஏர் விலையையும் குறைத்துள்ளது. அதன் படி, 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட M2 சிப்செட் கொண்ட 13 இன்ச் மேக்புக் ஏர் இப்போது ரூ.10,000 குறைந்து ரூ.99,900-க்கும் மற்றும் கல்விக்கான (Education) மேக்புக் ஏர்விலை ரூ.89,900-க்கும் விலை குறைந்துள்ளது.

Read More :- Whatsapp : இனி மற்ற ஆப்ஸ்க்கும் மெசேஜை அனுப்பலாம் ..! வந்தாச்சு புதிய அப்டேட் ..!

கடந்த 2022-ம் ஆண்டு அடிப்படை மாடலுக்காக முதலில் ரூ.1,19,900-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து M2 மேக்புக் ஏர் மடிக்கணினிகள் மிகவும் நியாயமான விலையில் விற்கப்படுகிறது. தற்போது குறைந்துள்ள இந்த 13-இன்ச் மேக்புக் ஏர் விலையானது M2 மாடலின் ஆரம்ப விலையிலிருந்து 2-வதாக குறைக்கப்பட்ட விலையாகும். M2 சிப் கொண்ட  Apple MacBook Air ஆனது 13.6-இன்ச் லிக்விட் ரெடினா டிஸ்ப்ளே மற்றும் 1080p ஃபேஸ்டைம் HD கேமரா அமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இந்த Apple MacBook 35W  மற்றும் 67W – ஐ சப்போர்ட் செய்கிறது. இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 18 மணிநேரம் வரை நீடிக்கும். நீங்கள் இந்த MacBook Air-ஐ சில்வர், ஸ்பேஸ் க்ரே, மிட்நைட் மற்றும் ஸ்டார்லைட் என நான்கு வெவ்வேறு வண்ணங்களில் பெறலாம். மேலும்,  MacBook Air ஆனது 4K மற்றும் 8K வீடியோக்களை (Support) ஆதரிக்கும் வகையில் உருவாக்கி உள்ளனர்.

Read More :- யாரெல்லாம் இந்த ஸ்மார்ட்போன்களுக்கு வெயிட்டிங்? இம்மாதம் வெளியாகும் டாப் 4 லிஸ்ட்!

ஆனால், இந்தியாவில் வெளியாகி உள்ள அந்த புதிய ஜெனெரேஷனான M3யுடன் 13-இன்ச் மேக்புக் ஏர் விலையானது விலைமாற்றம் இல்லாமல் ரூ.1,14,900-க்கும் மற்றும் கல்விக்கான (Education) மேக்புக் ரூ.1,04,900-க்கும் விற்பனையாகிறது. மேலும், M3யுடன் 15-இன்ச் மேக்புக் ஏர் ரூ.1,34,900 மற்றும் கல்விக்கான (Education) மேக்புக் ரூ.1,24,900 விற்ப்பனையாகிறது. இந்த இரண்டு MacBook Air-யும் சில்வர், ஸ்பேஸ் க்ரே, மிட்நைட் மற்றும் ஸ்டார்லைட் என நான்கு வெவ்வேறு வண்ணங்களிலும் பெறலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்