சர்வதேச சந்தையில் மக்களிடம் ஏற்பட்ட அலைபேசி மோகத்தால் நல்ல முன்னேற்றமும்,விற்பனையும் என கலைகட்டி வந்த ஆப்பிள் ஐ போன் மோகம் தற்போது குறைந்துவருகிறது.இதன் தொடர்ச்சியாக சர்வதேச சந்தைகளில் விற்பனை குறைவு மற்றும் மக்களிடையே சாதனங்களுக்கான மோகம் குறைந்திருப்பதால் ஐபோன்களின் விலையை அதிரடியாக குறைக்க ஆப்பிள் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.அதன்படி,உலகின் மிகப்பெரிய சந்தையான சீனாவில் முதலில், ஐபோன் XR, ஐபோன் XS, ஐபோன் XS MAX, ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8+ உள்ளிட்ட மாடல்களின் விலையை குறைப்பதாக ஆப்பிள் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.
இதுபோக வாடிக்கையாளர்களை கவர விலை குறைப்பு மட்டுமின்றி பை-பேக் சலுகைகள் மற்றும் இதர தள்ளுபடிகளையும் வழங்க ஆப்பிள் நிறுவனம் ஆலோசனையும் நடைபெற்று வருகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த முடிவிற்கு பொதுமக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.இதை, ஆப்பிள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியான அறிவிப்பானது, ஐபோன் XR விலை $449 டாலர்கள், ஐபோன் XSன் விலை $699 டாலர்கள் முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய சந்தையான சீனாவில் முதலில் இந்த விலை குறைப்பு அறிமுகமாகியுள்ள நிலையில் விரைவில் இந்தியா மற்றும் இதர நாடுகளில் ஐபோன் விலை குறைப்பு சார்ந்த அறிவிப்பு வெளிவரும் என தெரிகிறது.இதனால் இந்த செய்தி ஐபோன் பிரியர்களை மிகுந்த ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
DINASUVADU.
டெல்லி : ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்து சட்டமன்ற கூட்டத் தொடரானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று…
சென்னை : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று (நவம்பர் 8) தனது 58வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.…
சென்னை : சிவகார்த்திகேயன் ரஜினிகாந்த் மீது வைத்து இருக்கும் அன்பைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம். சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு வரை…
சென்னை : மது ஒழிப்பு மாநாட்டின் போது, விசிக - அதிமுக கூட்டணி பேச்சுக்கள் , ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…
சென்னை : தங்கம் விலை நேற்று நகை பிரியர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக சற்று குறைந்தது. அதாவது, தீபாவளி பண்டிகையை…
சென்னை : தமிழ்நாட்டில் விவசாயம் செழிக்க பேருதவி புரியும் சூரியனை வணங்கும் விதமாக பொங்கல் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 14இல்…