அப்பளமாக நொருங்கும் ஆப்பிள் ஐ பேடு…!!! அதிர்ச்சியில் உறைந்த ஆப்பிள் வாடிக்கையாளர்கள்…!!!!
மிகவும் மெல்லிய எடை குறைவான மெல்லிய ஐபேட் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ள முன்னனி நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் ப்ரோ, மெலிதாக இருந்தாலும் மிக எளிதில் உடையக்கூடிய தன்மை இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.இந்த ஐ பேடு பார்க்க கவர்ச்சியாக இருக்கும் வகையில் இந்த கருவியை உருவாக்கிய ஆப்பிள் நிறுவனம், அதன் வலிமையைக் கவனிக்காமல் விட்டுவிட்டது.
பிரபல யூடியூப் பதிவர் ஜெர்ரி ரிக் எவ்ரிதிங் என்பவர், புதிய ஐபேட் ப்ரோ எவ்வளவு எளிதில் உடைகிறது, சிராய்ப்புகள் ஏற்படுகிறது,அதன் தன்மைகளை ஆராய்ந்துள்ளார். அவர் வளைத்த முதல் முறையே ஐபேட் ப்ரோ உடைந்து போனதில் ஆச்சரியம் எதுவுமில்லை.எனவே, நீங்கள் ஐபேட் ப்ரோ வாங்கும் எண்ணம் கொண்டவர் என்றால் அதை மிக மிக ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளவும் மறக்காதீர்கள்.
நீங்கள் அதைக் கவனிக்காமல் வைத்து விட்டுப் போகும்போது யாராவது தெரியாமல் அதன் மேல் உட்கார்ந்தால் அவ்வளவு தான். ஐபேட் ப்ரோ இரண்டு பாகங்களாக உங்களுக்குக் கிடைக்கும் அந்த அளவிற்க்கு மிகவும் மெல்லியதாக உள்ளது.ஐபோன் எக்ஸ்ஆர் விலையிலேயே கிடைக்கும்.
ஐபேட் ப்ரோ 11 இன்ச் அகல திரை கொண்டது. 12.9 இன்ச் அகல திரை இருக்கும் பாடல்களில் லிகிவிட் ரெடினா டிஸ்ப்ளேவும், மேம்படுத்தப்பட்ட ஆப்பிள் பென்சிலும், டைப் சி USB தேர்வும், 10 மணிநேரங்களுக்கு மேல் தாக்குப்பிடிக்கும் பேட்டரியும் உள்ளது.ஆனாலும் இதன் வலிமை குன்றிய நிலையால் இதன் தரம் குறைவாக உள்ளதாக வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர்.
DINASUVADU.