AppleMarketValue [Image Source : 9to5mac]
ஆப்பிள் உலகில் முதல் 3 டிரில்லியன் டாலர் நிறுவனம் என்ற சாதனையை படைத்துள்ளது.
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் நாஸ்டாக் பங்குகள் நேற்றைய வர்த்தக நாளில், 3 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்புடன் நிறைவடைந்தது. இதனால் உலகில் முதல் 3 டிரில்லியன் டாலர் நிறுவனம் என்ற சாதனையை ஆப்பிள் படைத்துள்ளது.
அமெரிக்க பன்னாட்டு நிதிச் சேவை நிறுவனமான நாஸ்டாக், அமெரிக்காவில் நாஸ்டாக், பிலடெல்பியா மற்றும் பாஸ்டன் ஆகிய மூன்று பங்குச் சந்தைகளை இயக்குகிறது. இதில் நாஸ்டாக் பங்குச் சந்தை என்பது நியூயார்க் நகரத்தில் உள்ள ஒரு அமெரிக்க பங்குச் சந்தையாகும். இந்த பங்குச் சந்தையானது நேற்று 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சத்தில் இருந்துள்ளது. இதில் ஆப்பிளின் பங்கு கிட்டத்தட்ட 46% உயர்ந்துள்ளது.
அதன்படி, நேற்றைய வர்த்தக நாளில் ஆப்பிளின் பங்கு 194.48 டாலர் என்ற சாதனை புள்ளியை அடைந்த பிறகு 193.97 டாலரில் முடிவடைந்தது. இந்த மாற்றம் அதன் சந்தை மதிப்பை 3.04 டிரில்லியன் டாலராகக் கொண்டு வந்தது. மேலும், டிரில்லியன் டாலர் மதிப்பைக் கொண்ட ஆறு நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. அவற்றில் ஐந்து தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகும்.
இதில் மைக்ரோசாப்ட் 2.5 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள இரண்டாவது பொது நிறுவனமாகும். எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோவின் சந்தை மதிப்பு 2.08 டிரில்லியன் டாலர்கள் ஆகவும் கூகுள், அமேசான் மற்றும் என்விடியாவின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் 1 டிரில்லியன் டாலர்களுக்கு மேல் சந்தை மதிப்புகளைக் கொண்டுள்ளது.
இதற்கிடையில், ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தனது புதிய படைப்பான ஆப்பிள் விஷன் ப்ரோ (Apple Vision Pro) என்று அழைக்கப்படும் Virtual Realty அம்சத்துடன் ஒரு புதிய ஹெட்செட்டை அறிமுகம் செய்தது. இந்த ஹெட்செட் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவில் 3,499 டாலர் என்ற விலையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை :காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.…
சென்னை : தங்கம் விலை இன்று (ஏப்.4) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்துள்ளது. கடந்த சில தினங்களாக தொடர்ந்து…
சென்னை : வக்ஃபு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில், இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு வரி விதிப்பதாக அதற்கான பட்டியலை…
மும்பை : பிரபல இந்திய நடிகரும் இயக்குநருமான மனோஜ் குமார் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் தனது…