ஆப்பிள் நிறுவனத்திற்கு கடும் நெருக்கடி..!! டெல் நிறுவனத்தின் புதிய படைப்பு அறிமுகம்..!!
XPS 13 ஐ வடிவமைத்துள்ளது டெல் நிறுவனம்.இதில் அனைத்து அம்சங்களும் உள்ளன. சிறந்த லேப்டாப்பாக திகழும் XPS வரிசையில், இந்த XPS 13 ஒரு முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. ஆப்பிள் மேக்புக்கை போல எதுவும் முயற்சி செய்யவில்லை என்பது தான். உண்மையிலேயே இது அதை விட சிறந்த செயல்திறன் வாய்ந்தது.
அதிக திறன்வாய்ந்த 4k டச் ஸ்கிரீன் வசதி கொண்ட திரை, இன்ப்ராரெட் பேஸ் ரெகக்னேசன், பைபர் உலோகத்தால் ஆன வெளிப்புற வடிவமைப்பு, மிக மெல்லிசான திரை போன்றவை டெல் XPS13 லேப்டாப்-ன் நிறைகளாக இருக்கும் அதே வேளையில்,அதன் விலை, வெப்கேம் வைக்கப்படும் இடம், குறைக்கப்பட்ட பேட்டரியின் அளவு போன்றவை குறைகளாக பார்க்கப்படுகிறது.
டெல் நிறுவனம் XPS13 ல் லேப்டாப் வடிவமைப்பை மாற்றியுள்ளது. உட்புறம் முழுவதும் வெள்ளை நிறத்தில் அதன் பார்வையை முற்றிலும் மாற்றியுள்ளது. கடந்த தலைமுறை லேப்டாப்களுடன் ஒப்பிடும் போது, இதன் திரை 23%மெல்லியதாக உள்ளது.
திரையை பொறுத்தமட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பயனர் தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு தொடுதிரை வசதியில்லாத 920 x 1080p HD டிஸ்ப்ளே அல்லது 3840 x 2160 பிக்சல் கொண்ட 4K Ultra HD Infinity Edge டிஸ்ப்ளேவை தேர்வு செய்யலாம். மேலும், 13 இன்ச் திரையான இதில் பிரைட்னஸ் 100% தேவையே இல்லை. மிக பிரகாசமான திரைக்கு பாதிஅளவே போதுமானது.
உள்ளீடுகளை சிறப்பாக பெறுவதில் டெல் தான் எப்போதும் டாப். இந்த XPS13 லும் பட்டனைகளுக்கு இடையேயான இடைவெளி , 2 லெவல் பேக் லைட் போன்ற நீண்ட நேரம் டைப் செய்ய வசதியாக இருக்கும்.அது போல் டிரேக் பேடும், ஓவேன் கண்ணாடியால் ஆனதால், எந்தவித கீறல்களும் ஏற்படா வண்ணம் துல்லியமாக செயல்படும்.
டெல் XPS13 லேப்டாப் சிறப்பாக செயல்பட ஏதுவாக 1.80GHz இன்டெல் கோர் i7-8550U இயக்கியுடன் கூடிய சி.பி.யூ வும், 16GB ரேமும் உள்ளது. இதன் பேட்டரி குறைவாக உபயோகிக்கும் பட்சத்தில் 19மணி நேரம் தாக்குபிடிக்கும் என டெல் நிறுவனம் கூறுகிறது. மேலும் இதன் இன்ப்ராரெட் பேஸ் ரெகக்னேசன் மூலம், லாகின் செய்யும் போது எவ்வித பிரச்சனைகளும் இன்றி சிறப்பாக செயல்படுகிறது.
இந்த லேப்டாப்பின் விலை ரூ95,000 லிருந்து துவங்குகிறது அதில் i5 இன்டெல் இயக்கி மற்றும் 256GB சேமிப்புதிறன் வசதிகள் உள்ளன. 4K டச் ஸ்கிரீன் திரை,i7 இன்டெல் இயக்கி மற்றும் 512GB சேமிப்புதிறன் கொண்ட லேப்டாப்பின் விலை ரூ.1,60,000 ஆகும்.