iPhone Production [Image Source : CNET]
கடந்த சில நாட்களாக உலகளவில் பிரபலமான ஸ்மார்ட்போன் நிறுவனமான ஆப்பிள், இந்தியாவில் அதன் ஐபோன்களின் உற்பத்தி மீது கவனம் செலுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 50 மில்லியனுக்கும் அதிகமான ஐபோன்களை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.
அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் இந்த ஐபோன்களைத் தயாரிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. சீனாவை நம்பியிருப்பதைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவும், இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை இரட்டிப்பாக்கும் நோக்கிலும் ஐபோன்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த 50 மில்லியன் யூனிட்கள் என்கிற எண்ணிக்கை உலக அளவில் உற்பத்தியாகும் ஐபோன்களில் நான்கில் ஒரு பங்கு அல்லது 25 சதவீதம் ஆகும். ஆப்பிள் ஏற்கனவே ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் ஆகியவற்றை இந்தியாவில் அசெம்பிள் செய்து வருகிறது. உற்பத்திக்கான தேவையை பூர்த்தி செய்ய, ஆப்பிள் இந்தியாவில் அதன் தொழிற்சாலைகளை விரிவுபடுத்துகிறது.
அதன்படி, சென்னையில் இருக்கக்கூடிய ஃபாக்ஸ்கான் ஆலையை விரிவுபடுத்த உள்ளது. அதேபோல இந்தியாவில் ஐபோன் தயாரிப்பில் ஈடுபடும் முதல் இந்திய நிறுவனமான டாடா எலக்ட்ரானிக்ஸ் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாட்டின் ஓசூரில் இருக்கக்கூடிய ஐபோன் உற்பத்தி ஆலையை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.
ஆலையை அடுத்த 12 முதல் 18 மாதங்களில் விரிவுபடுத்த உள்ளது. இந்த ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டவுடன் 25,000 முதல் 50.000 பேர் வேலைவாய்ப்புக்கான வாய்ப்பைப் பெறுவார்கள். தற்போது இந்த ஆலையில் 15,000 பேர் பணிபுரிகின்றனர். விரிவாக்கம் செய்யப்பட்டவுடன் ஆலையில் சுமார் 20 அசெம்பிளி லைன்களைக் கொண்டிருக்கும். இதனால் ஐபோன் உற்பத்தி அளவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…
கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…
திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின்…
கோவை : கோவையில் நடைபெற்று வரும் தவெக கருத்தரங்கில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் வந்தபோது, விமான நிலையத்திற்குள் தடுப்புகள்,…
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…