பலருக்கும் தன்மை விட தனது ஸ்மார்ட் போன் மீது அதீத அன்பும் அக்கறையும் இருக்கும். ஸ்மார்ட் போனை நாம் எந்த அளவுக்கு பார்த்து கொள்கிறோமோ அந்த அளவிற்கு தான் அதன் செயல்பாடும், திறனும் கூடும்.
ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் பலருக்கும் அதில் உள்ள சில முக்கியமான செட்டிங்ஸ்கள் பற்றி தெரிவதில்லை. இந்த தொகுப்பில் நாம் அவசியம் இப்போதே மாற்ற கூடிய 5 செட்டிங்ஸ் பற்றி பார்க்க போகிறோம்.
பிளேஸ்டார்
அன்றாடம் பல ஆயிர கணக்கான ஆப்ஸ்கள் வெளி வருகின்றன. இந்த ஆப்ஸ்களில் பல, நம் மொபைலை முழுவதுமாக சேதம் செய்கின்றன. இது போன்ற மோசமான ஆஃப்ஸ்களில் இருந்து உங்கள் ஸ்மார்ட் போனை காக்க இதனை செய்யுங்கள்.
பிளேஸ்டோரை க்ளிக் செய்தவுடன் அதில் 3 கோடுகள் இருக்கும். அதை க்ளிக் செய்து play protect என்கிற ஆப்ஷனை தேர்வு செய்யவும். அடுத்து அதில் improve harmful app protection என்பதை டிக் செய்ய வேண்டும். பிறகு my apps & games என்பதை refresh செய்யவும். இதில் no problems found என்று வந்தால் அந்த ஆஃப்சை நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம்.
பிரைவசி
உங்களின் அந்தரங்க விஷயத்தை மற்றவர்கள் பார்க்க கூடாது என விருப்பினால் இந்த செட்டிங்ஸை மாற்றவும். அதற்கு செட்டிங்ஸ் உள் நுழைந்து notification ஆப்ஷனை க்ளிக் செய்த பின், when device is locked என்பதை க்ளிக் செய்யவும். இதில் 3 ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். இவற்றில் hide sensitive notification என்பதை டிக் செய்யவும். இது உங்களின் போன் கால்ஸ்,மெசேஜ் மற்றும் இதர செய்திகளையும் பிறரிடம் இருந்து மறைத்து விடும்.
எண்கள்
உங்களின் மொபைல் கீபோர்டில் எண்களை டைப் செய்ய கடினமாக இருந்தால் அதற்கும் எளிய வழி உண்டு. அதாவது, செட்டிங்ஸ் உள் நுழைந்து அதில் ஜிபோர்டு ஆப்சனை க்ளிக் செய்து பின், preference என்பதை க்ளிக் செய்யவும். அடுத்து number row என்பதை டிக் செய்தால் உங்களின் கீபோர்ட்டில் எண்களுக்கான வரிசை சேர்க்கப்பட்டிருக்கும். இதனை சுலபமாக பயன்படுத்தலாம்.
முக்கியம்
உங்கள் மொபைலை தவறுதலாக எங்கேயாவது விட்டு சென்றாலோ, அல்லது உங்களுக்கு ஏதேனும் விபத்து நேர்ந்தாலோ அதை உங்கள் உறவினர்களுக்கு தெரியப்படுத்த இந்த செட்டிங்ஸை மாற்றவும். அதாவது, செட்டிங்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்து, அதில் security என்கிற ஆப்ஷனை தேர்வு செய்த பின் lock screen message என்பதை க்ளிக் செய்து அதில் உங்களின் பெற்றோர்களின் போன் நம்பரை பதிவு செய்யவும். இது மிக உதவியாக இருக்கும்.
தேடு பொறி கீழே வர
உங்களது மொபைலில் தேடி பொறி ஆப்ஷன் இருக்கும். இதனை கீழே கொண்டு வர chrome://flags என்பதை கூகுளில் டைப் செய்து உள்ளே நுழையவும். இதில் chrome home என்பதை தேர்வு செய்த பின் enable ஆப்ஷனை க்ளிக் செய்யவும். கடைசியில் launch now என்பதை க்ளிக் செய்தால் உங்களின் தேடு பொறி கீழ் பகுதியில் வந்து விடும்.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…