Jio5G : அன்லிமிடெட் டேட்டா இருந்தும் மாசம் ரீசார்ஜ் பண்றீங்களா? இனிமே அதை பண்ணாம இந்த ஆஃபர் போடுங்க!

jio 5g unlimited

Jio5G : ஜியோ பயனர்கள் பலருக்கும் தெரியாத ஒரு அசத்தலான 5 ஜி ரீசார்ஜ் திட்டம் விவரமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இப்போது 5 ஜி நெட்வொர்க் ஜியோ,ஏர்டெல், பிஎஸ்என்எல், உள்ளிட்ட பல  சிம் கார்டுகளில்  வந்துவிட்டதால் அன்லிமிடெட்  டேட்டாவை பலரும் உபயோகம் செய்து கொண்டு வருகிறார்கள். போன் 5 ஜியாக இருந்தாலே போதும் நாம் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம்.  இதில் ஜியோ பயனர்கள் பலரும் ஜியோ மற்ற நெட்வொர்கிடம் ஒப்பிட்டு பார்க்கையில் சற்று வேகமாக இருப்பதாகவும் கூறி வருகிறார்கள்.

எனவே, பலரும் தங்களுக்கு விருப்பப்பட்ட ரீசார்ஜ் திட்டங்களை தொடர்ச்சியாக செய்துகொண்டு 5 ஜி டேட்டாவை உபயோகித்து கொண்டு இருக்கிறார்கள். இதில்  5ஜி அன்லிமிடெட்  இருந்தும் கூட மாதம் மாதம் சில பயனர்கள் ரீசார்ஜ் செய்துகொண்டும் வருகிறார்கள். ஆனால், மாசம் மாசம் ரீஜார்ஜ் செய்யாமல் 3 மாதம் சேர்த்து ஒரு அசத்தலான திட்டத்தின் மூலம் ரீஜார்ஜ் செய்தால் கூட அன்லிமிடெட்  டேட்டாவை பயன்படுத்திக்கொள்ள முடியும். அப்படியான  ஒரு அசத்தலான ரீசார்ஜ் பிளான் கூட இருக்கிறது. அது என்ன பிளான் என்பதனை விவரமாக பார்க்கலாம்.

வழக்கமாக மாதம் மாதம் ரீசார்ஜ் பிளான் செய்பவர்கள் ரூபாய் – 239 திட்டத்தில் ரீசார்ஜ் செய்வார்கள். இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 1.5ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட்  வாய்ஸ்கால் 100 எஸ்எம்எஸ் 28 வேலிடிட்டி நாட்கள் வசதியுடன் வரும். இந்த ரீஜார்ஜ் திட்டத்தில் இருந்து தான் 5ஜி டேட்டா கிடைக்கும் எனவே பலரும் இந்த திட்டத்தில் ரீஜார்ஜ் செய்து வருகிறார்கள். ஆனால், இனிமேல் இந்த திட்டத்தை விட்டுவிட்டு நீங்கள் 385  திட்டத்தில் ரீஜார்ஜ்  செய்தால் உங்களுடைய பணத்தை சேமிக்கலாம்.

இந்த 385  திட்டத்தில் மொத்தமே 6 ஜிபி டேட்டா தான் வரும். ஆனால், அதற்காக கவலை படவே வேண்டாம் ஏனென்றால், 5 ஜி அன்லிமிடெட் டேட்டா போய்க்கொண்டு இருக்கிறது. 385  திட்டத்தில் 84 நாள் வேலிடிட்டி, மொத்தமாக 1000 எஸ்எம்எஸ் வசதி வருகிறது. அதைப்போல இந்த திட்டத்தில்  ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட், ஜியோ செக்யூரிட்டி ஆகியவற்றுக்கான இலவச சந்தாவும் வருகிறது.

வழக்கமாக 239 திட்டத்தில் ரீசார்ஜ் செய்பவர்கள் 3 மாதம்  ரீசார்ஜ் செய்தால் 717 ரூபாய் வரும். ஆனால்,  அதே 385  திட்டத்தில் நீங்கள் ரீசார்ஜ்  செய்தால் 3 மாதம் சேர்த்து மொத்தமாக உங்களுடைய பணத்தில்  332 ரூபாய் சேமிக்கலாம். இருந்தாலும் 5 ஜி அன்லிமிடெட்  வசதி இருக்கும் வரை மட்டுமே இந்த ரீசார்ஜ் திட்டம் பயனுள்ளதாக இருக்கும். எனவே விருப்பம் உள்ளவர்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.

குறிப்பு : மேலும் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்பவர்கள் 4 ஜி நெட்வொர்க் கிடைக்கும்போது மொத்தமாகவே 6 ஜிபி டேட்டா மட்டுமே உபயோகித்து கொள்ள முடியும். 5 ஜி நெட்வொர்க் கிடைத்தால் மட்டும் தான் அன்லிமிடெட் டேட்டாவை உங்களால் பயன்படுத்தி கொள்ள முடியும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
TVK Vijay Dharmapuri
Pradeep John -TN Rains
Kasthuri Shankar - Police Arrest
Arvind Kejriwal - Kailash Gahlot
Space X - Elon Musk
tn rainy