பயனர்களுக்கு தூண்டில் போட்ட அம்பானி! ஜியோ ஹாட்ஸ்டார் திட்டங்கள் என்னென்ன தெரியுமா?

ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ சினிமா தளங்கள் இணைந்துள்ள நிலையில் இனிமேல் ஐபிஎல் போட்டியை இலவசமாக பார்க்க முடியாது சந்தா கட்டி தான் பார்க்க முடியும் என்பதால் கிரிக்கெட் விரும்பிகள் சோகத்தில் உள்ளனர்.

ambani jio hotstar

சென்னை : இந்தியாவில் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாக இருந்த ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ சினிமா இரண்டு ஒன்றாக இணைந்து ஜியோ ஹாட்ஸ்டார் என்கிற தளமாக உருவாகியுள்ளது. எனவே, இதற்கு முன்பு இரண்டு தளங்களில் என்னென்ன நிகழ்ச்சிகள் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பானதோ அது அனைத்துமே இனிமேல் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும்.

இந்த தளத்தில் என்னென்ன விலைக்கு என்னென்ன வசதிகள் கிடைக்கிறது என்பது பற்றி விவரமும் வெளிவந்து இருக்கிறது. அது பற்றி விவரமாக பார்ப்போம்.

ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் திட்டம் (JioHotstar Mobile Plan)

  • நீங்கள் இந்த திட்டத்தினை பெற விரும்புனீர்கள் என்றால் ஆரம்ப கட்டணம் ரூ.149 (3 மாதங்கள்) வேலிடிட்டி உடன் வரும் அதுவே  (1 ஆண்டு) என்றால் ரூ.499.
  • இந்த திட்டத்திற்கு நீங்கள் சந்தா கட்டினால் மொபைல் சாதனத்தில் மட்டும் பயன்படுத்தி கொள்ள முடியும்.
  • ஒரே நேரத்தில் ஒரு சாதனத்தில் மட்டுமே பயன்படுத்தலாம்
  • முழு தொடர் மற்றும் திரைப்படங்களுக்கு விளம்பரங்கள் காணப்படும்
  • 720p HD தரத்தில் உள்ளடக்கங்களை ஸ்ட்ரீம் செய்து பார்த்து கொள்ளலாம்.

ஜியோ ஹாட்ஸ்டார் சூப்பர் திட்டம் (JioHotstar Super Plan)

  • இந்த திட்டத்தின் கட்டணம் ரூ.299 (3 மாதங்கள்) மற்றும் ரூ.899 (1 ஆண்டு)
  • மொபைல், ஸ்மார்ட் டிவி, இணையதளம் உள்ளிட்ட சாதனங்களில் பார்க்கலாம்
  • ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களில் ஸ்ட்ரீம் செய்யலாம்
  • முழுவதுமாக நீங்கள் வெப் தொடர் அல்லது படங்கள் பார்த்துக்கொண்டிருந்தால் விளம்பரங்கள் காணப்படும்
  • 1080p Full HD தரத்தில் நீங்கள் பார்த்து மகிழலலாம்.
  • அமேசான் Fire Stick, Android TV, Apple TV போன்ற சாதனங்களில் கூட இந்த திட்டத்திற்கு நீங்கள் சந்தா கட்டினால் பயன்படுத்தலாம்.

ஜியோஹாட்ஸ்டார் பிரீமியம் திட்டம் (JioHotstar Premium Plan)

  • இந்த திட்டத்தின் கட்டணம் ரூ.299 (1 மாதம்), ரூ.499 (3 மாதங்கள்) மற்றும் ரூ.1,499 (1 ஆண்டு)
  • இந்த திட்டத்திற்கு நீங்கள் சந்தா கட்டினால் அனைத்து சாதனங்களிலும் நீங்கள் பயன்படுத்தலாம்.
  • ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களில் பார்க்கலாம்
  • விளம்பரங்கள் இருக்காது (ஆனால் நேரலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் விளம்பரங்கள் காணப்படும்)
  • 4K Ultra HD தரத்தில் அனைத்தையும் பார்த்து மகிழலாம்.
  • இந்த திட்டம் மொபைல், டிவி, இணையம், லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட அனைத்து சாதனங்களிலும் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்

ஏற்கனவே ஹாட்ஸ்டார் தளத்தில் சந்தா வைத்திருப்பவர்கள் அது காலாவதியான தேதி வரை அதே திட்டத்தை பயன்படுத்தலாம். அதைப்போல, ஜியோ சினிமா தளத்தை  இலவசமாக பயன்படுத்தியவர்கள், புதிய திட்டங்களில்  மாற்றங்களும் வரும் வரை அதை தொடர முடியும் பதிய சந்தா திட்டங்கள் மார்ச் 2025 முதல் ஜியோ ஹாட்ஸ்டார்  பயன்பாட்டில் கிடைக்கும்.

மேலும், இந்த முறை ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பே ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ சினிமா இரண்டு நிறுவனங்களும் ஒன்றாக இணைந்துள்ளது. எனவே, இதுவரை ஐபிஎல் போட்டிகள் இலவசமாக ஜியோ சினிமாவில் ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்த நிலையில், இப்போது சந்தா கட்டி தான் பார்க்கவேண்டும் என்கிற சூழல் நிலவியுள்ளது.

சந்தா கட்டும் பயன்பாடு மார்ச் மாதம் தான் தொடங்குகிறது. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளும் வரும் மார்ச் 21-ஆம் தேதி தான் துவங்குகிறது. எனவே, இதனையெல்லாம் கருத்தில் கொண்டு தான் அம்பானி மாஸ்டர் பிளான் செய்து இப்படியான திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறார். ஏற்கனவே, இலவசமாக ஐபிஎல் போட்டிகளை பார்க்கும் வசதியை கொடுத்து ஜியோ சினிமா ஓடிடி தளத்தை அதிகமானோர் பதிவிறக்கம் செய்ய வைத்தார்.

இப்போது, அதனை ஹாட்ஸ்டாருடன் இணைத்து மார்ச் மாதம் முதல் சந்தா திட்டத்தை அறிமுகம் செய்தால் ஐபிஎல் பார்க்கும் விரும்பிகள் நிச்சயமாக சந்தா செலுத்துவார்கள் என திட்டமிட்டு அம்பானி தனது தொழில் திட்டத்தை திட்டியிருப்பதும் இதன் மூலம் தெரியவந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்