இந்தியாவில் அமேசான் பிரைம் மியூஸிக் சேவை தொடங்கப்பட்டுள்ளது இசைப் பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், இந்தியாவில் கடந்த 2016ஆம் ஆண்டில் தனது பிரைம் வீடியோ சேவையை துவங்கியது.
தற்போது 6 லட்சம் பிரத்யேக வாடிக்கையாளர்கள் அமேசான் பிரைம் வீடியோ ஸ்டிரீமிங் சேவையை பயன்படுத்தி வரும் நிலையில், இதன் போட்டியாளரான நெட்ப்ளிக்ஸ்(Netflix) -ஐ முந்தி இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்டிரீமிங் வழங்கும் தளமாக உருவெடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அமேசான், தற்போது மியூசிக் ஸ்டிரீமிங் தளத்திலும் தனது கால்தடத்தை பதித்துள்ளது .
கடந்த 2014ஆம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்ட அமேசான் பிரைம் மியூசிக் ஸ்டிரீமிங் சேவை தற்போது ஓசையில்லாமல் இந்தியாவிலும் தொடங்கப்பட்டுள்ளது.
தற்சமயம் மியூசிக் ஸ்டிரீமிங் சேவைத் துறையில் முன்னணியில் உள்ள சாவன்(saavn), காண (Gaana), ஆப்பிள் மியூசிக்( apple music) போன்ற போட்டியாளர்களுக்கு கடும் நெருக்கடியை அமேசான் பியூசிக் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரம்பகட்டமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி, போஜ்பூரி, குஜராத்தி, ராஜஸ்தானி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மொழிகளின் பாடல்கள் அமேசான் தளத்தில் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…