தொழில்நுட்பம்

Amazon Prime Lite : மலிவான கட்டணத்தில் ‘பிரைம் சந்தா திட்டம்’…மாஸ் காட்டும் அமேசான் நிறுவனம்.!!

Published by
பால முருகன்

மக்கள் பலரும் வெப் தொடர்கள் அல்லது படங்கள் பார்க்கவேண்டும் என்றால், அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் பார்ப்பது உண்டு. அதைப்போலவே, அமேசானில் பலரும் ஷாப்பிங் செய்வதும் உண்டு. இந்த நிலையில், தற்போது அமேசான் நிறுவனம் இந்தியாவில் விலை குறைந்த அமேசான் பிரைம் லைட் (Amazon Prime Lite)  திட்டத்தை  அறிமுகம் செய்துள்ளது.

அமேசான் பிரைம் லைட்

இனிமேல் Amazon India இணையதளத்தில் ஒரு பொருட்கள் ஷாப்பிங் செய்து வாங்கினால் திட்டத்தின் ஒரு பகுதியாக, உறுப்பினர்கள் தகுதியான முகவரிகளுக்கு ‘நோ-ரஷ்’ ஷிப்பிங்கிற்கும் தகுதி பெறுவார்கள்.  பிரைம் லைட் உறுப்பினர்கள் Amazon Pay ICICI வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி Amazon India இணையதளத்தில் வாங்கும் போது 5% பணத்தை திரும்பிப்பெற்றுகொள்ளலாம்.

Amazon Launches Prime Lite Membership [Image Source : Twitter/@gizmochina]

மேலும், ஓடிடியில் படங்கள் அல்லது வெப் தொடர்கள் பார்க்கவேண்டும் என்றால், எச்டி தரத்தில் விளம்பரங்களைக் கொண்ட இரண்டு சாதனங்களில் மட்டுமே ஸ்ட்ரீம் செய்ய முடியும். இடையே இடையே விளம்பரங்களும் வரும்.

மாதம் எவ்வளவு சந்தா..? 

Amazon Prime Lite திட்டத்தை 12 மாத காலத்திற்கு ரூ.999க்கு வாங்கலாம். புதிய பிரைம் லைட் திட்டத்தில் பதிவு செய்ய, iOS மற்றும் Android க்கான Amazon பயன்பாட்டிற்குச் செல்லவும். அல்லது, Amazon India இணையதளத்தைப் பார்வையிடவும்.

அமேசான் பிரைம் லைட் நன்மைகள் 

Amazon Prime Lite [Image Source : Twitter/@Mobile_deals_in]
  • பிரைம் லைட் உறுப்பினர்கள் அனைவருக்கும் ஏதேனும் ஆர்டர் செய்தால் இலவச டெலிவரி அம்சத்துடன் 2 நாட்களில் பொருட்கள்  வழங்கப்படும்.
  • உறுப்பினர்கள் தகுதியான முகவரிகளுக்கு நோ-ரஷ் ஷிப்பிங்கை அனுபவிக்கலாம் மற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.25 கேஷ்பேக் பெறலாம்.
  • பிரைம் லைட் மெம்பர்ஷிப்பின் ஒரு பகுதியாக, Amazon Pay ICICI வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி Amazon India இணையதளத்தில் வாங்கும் போது Amazon 5% கேஷ்பேக் வழங்குகிறது.
  • பிரைம் வீடியோவில் இருந்து விளம்பரங்களுடன் HD தரத்தில் 2 சாதனங்களில் இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து வரம்பற்ற வீடியோக்கள், திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகளை ஸ்ட்ரீம் செய்து கொள்ளலாம்.

அமேசான் பிரைம் லைட் vs அமேசான் பிரைம் 

Lite pour Amazon Prim [Image Source : Twitter/@GNT_fr]

அமேசான் பிரைம் லைட் திட்டத்தின் கீழ், உறுப்பினர்கள் பிரைம் வீடியோவை எச்டி தரத்தில் விளம்பரங்களைக் கொண்ட 2 சாதனங்களில் மட்டுமே ஸ்ட்ரீம் செய்ய முடியும். அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் பிரைம் வீடியோவில் 4K உள்ளடக்கத்தை ஆதரிக்கும் அதே வேளையில், 6 சாதனங்களுக்கான ஆதரவுடன் விளம்பரங்கள் வராது. ஆனால், அமேசான் பிரைம் லைடில் விளம்பரங்கள் வரும்.  மேலும், அமேசான் ப்ரைம் மியூசிக், ப்ரைம் கேமிங் மற்றும் அமேசான் பிரைம் லைட் மூலம் ப்ரைம் ரீடிங்கிற்கு இலவச அணுகல் இல்லை  என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

ஷங்கரின் கேம் சேஞ்சரா? இல்லை கேம் ஓவரா? டிவிட்டர் விமர்சனம்!

சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்ததாக கம்பேக் கொடுக்கும்…

23 minutes ago

தொடர்ந்து உயரும் தங்கம் விலை… இன்று சவரனுக்கு எவ்வளவு?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து காணப்படுகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருக்கிறது.…

49 minutes ago

யார் அந்த சார்? ‘இவர் தான் அந்த சார்’ என சட்டப்பேரவையில் தி.மு.க உறுப்பினர்கள் கோஷம்.!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றயை நிகழ்வுகளில் பங்கேற்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், 'இவன்தான் அந்த சார்' என அண்ணா…

58 minutes ago

விஜய் இல்லாமல் தவெக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்.!

சென்னை: விஜயின் தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை பனையூர் அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில்…

1 hour ago

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு: சீமான் மீது 11 மாவட்டங்களில் வழக்குப்பதிவு!

சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இது தற்போது அரசியல்…

2 hours ago

“சாம்பியன்ஸ் டிராபிக்கு கண்டிப்பா சஞ்சு சாம்சன் தேவை” வேண்டுகோள் வைத்த முன்னாள் வீரர்கள்!

சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு அணியில் விளையாட வாய்ப்புகள் சரியாக வழங்கப்படாதது ஒரு பெரிய கேள்விக்குறியான…

2 hours ago