Amazon Prime Lite : மலிவான கட்டணத்தில் ‘பிரைம் சந்தா திட்டம்’…மாஸ் காட்டும் அமேசான் நிறுவனம்.!!
மக்கள் பலரும் வெப் தொடர்கள் அல்லது படங்கள் பார்க்கவேண்டும் என்றால், அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் பார்ப்பது உண்டு. அதைப்போலவே, அமேசானில் பலரும் ஷாப்பிங் செய்வதும் உண்டு. இந்த நிலையில், தற்போது அமேசான் நிறுவனம் இந்தியாவில் விலை குறைந்த அமேசான் பிரைம் லைட் (Amazon Prime Lite) திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
அமேசான் பிரைம் லைட்
இனிமேல் Amazon India இணையதளத்தில் ஒரு பொருட்கள் ஷாப்பிங் செய்து வாங்கினால் திட்டத்தின் ஒரு பகுதியாக, உறுப்பினர்கள் தகுதியான முகவரிகளுக்கு ‘நோ-ரஷ்’ ஷிப்பிங்கிற்கும் தகுதி பெறுவார்கள். பிரைம் லைட் உறுப்பினர்கள் Amazon Pay ICICI வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி Amazon India இணையதளத்தில் வாங்கும் போது 5% பணத்தை திரும்பிப்பெற்றுகொள்ளலாம்.
மேலும், ஓடிடியில் படங்கள் அல்லது வெப் தொடர்கள் பார்க்கவேண்டும் என்றால், எச்டி தரத்தில் விளம்பரங்களைக் கொண்ட இரண்டு சாதனங்களில் மட்டுமே ஸ்ட்ரீம் செய்ய முடியும். இடையே இடையே விளம்பரங்களும் வரும்.
மாதம் எவ்வளவு சந்தா..?
Amazon Prime Lite திட்டத்தை 12 மாத காலத்திற்கு ரூ.999க்கு வாங்கலாம். புதிய பிரைம் லைட் திட்டத்தில் பதிவு செய்ய, iOS மற்றும் Android க்கான Amazon பயன்பாட்டிற்குச் செல்லவும். அல்லது, Amazon India இணையதளத்தைப் பார்வையிடவும்.
அமேசான் பிரைம் லைட் நன்மைகள்
- பிரைம் லைட் உறுப்பினர்கள் அனைவருக்கும் ஏதேனும் ஆர்டர் செய்தால் இலவச டெலிவரி அம்சத்துடன் 2 நாட்களில் பொருட்கள் வழங்கப்படும்.
- உறுப்பினர்கள் தகுதியான முகவரிகளுக்கு நோ-ரஷ் ஷிப்பிங்கை அனுபவிக்கலாம் மற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.25 கேஷ்பேக் பெறலாம்.
- பிரைம் லைட் மெம்பர்ஷிப்பின் ஒரு பகுதியாக, Amazon Pay ICICI வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி Amazon India இணையதளத்தில் வாங்கும் போது Amazon 5% கேஷ்பேக் வழங்குகிறது.
- பிரைம் வீடியோவில் இருந்து விளம்பரங்களுடன் HD தரத்தில் 2 சாதனங்களில் இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து வரம்பற்ற வீடியோக்கள், திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகளை ஸ்ட்ரீம் செய்து கொள்ளலாம்.
அமேசான் பிரைம் லைட் vs அமேசான் பிரைம்
அமேசான் பிரைம் லைட் திட்டத்தின் கீழ், உறுப்பினர்கள் பிரைம் வீடியோவை எச்டி தரத்தில் விளம்பரங்களைக் கொண்ட 2 சாதனங்களில் மட்டுமே ஸ்ட்ரீம் செய்ய முடியும். அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் பிரைம் வீடியோவில் 4K உள்ளடக்கத்தை ஆதரிக்கும் அதே வேளையில், 6 சாதனங்களுக்கான ஆதரவுடன் விளம்பரங்கள் வராது. ஆனால், அமேசான் பிரைம் லைடில் விளம்பரங்கள் வரும். மேலும், அமேசான் ப்ரைம் மியூசிக், ப்ரைம் கேமிங் மற்றும் அமேசான் பிரைம் லைட் மூலம் ப்ரைம் ரீடிங்கிற்கு இலவச அணுகல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.