இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், கடந்த செப்டம்பர் 22ம் தேதி அமேசான் ஃபயர் எச்டி 10 கிட்ஸ் மற்றும் ஃபயர் எச்டி 10 கிட்ஸ் ப்ரோ டேப்லெட்களை அறிமுகப்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, தற்போது ஃபயர் எச்டி 10 (2023) என்ற புதிய டேப்லெட்டை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.
இந்த டேப்லெட் ஆனது 2021ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஃபயர் எச்டி 10 டேப்லெட்டின் புதுப்பிக்கப்பட்ட மாடல் என்று கூறப்படுகிறது. அதன்படி, இந்த புதிய ஃபயர் எச்டி 10 டேப்லெட், முந்தைய மாடலில் இருந்து ஒருசில குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுள்ளது.
டிஸ்பிளே
இதில் இருக்கக்கூடிய டிஸ்பிளே ஆனது 1920 x 1200 ரெசல்யூஷன் (1080p) கொண்ட 10.1 இன்ச் அளவில் உள்ளது. அலுமினோசிலிகேட் கண்ணாடி மூலம் டிஸ்பிளேவிற்கு மேலும் வலிமை சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய மாடலான ஃபயர் எச்டி 10 (2021) -லும் 10.1 இன்ச் டிஸ்பிளே உள்ளது.
பிராசஸர்
ஃபயர் எச்டி 10 (2023) டேப்லெட்டில் ஆக்டா-கோர் பிராசஸர் ஆனது பொருத்தப்பட்டுள்ளது. சிப்செட்டின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஃபயர் எச்டி 10 (2021) டேப்லெட்டில் மீடியாடெக் குவாட் கோர் பிராசஸர் உள்ளது. அதோடு அக்சிலரோமீட்டர், அம்பியன்ட் லைட் சென்சார் உள்ளது. ஃபயர் எச்டி 10 டேப்லெட் அமேசான் ஸ்டைலஸ் பேனா வசதியுடன் வருகிறது.
கேமரா மற்றும் பேட்டரி
இந்த டேப்லெட்டில் முன்புறம் மற்றும் பின்புறம் 5 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதில் 1080 பிக்சல் தெளிவுடன் கூடிய வீடியோவைப் பதிவு செய்ய முடியும். கூடவே 433.6 கிராம் எடையுள்ள ஃபயர் எச்டி 10 (2023)-ல் வீடியோ மற்றும் பாடல் கேட்கும்போது 13 மணி நேரம் வரை பயன்பாட்டில் இருக்கக்கூடிய பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய யுஎஸ்பி டைப்-சி போர்ட்டுடன் கூடிய 9 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதனால் 4 மணி நேரத்தில் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்ய முடியும். மேலும், இதற்காக கடைகளில் விற்கப்படும் 15 வாட்ஸ் அடாப்டர் மூலம் 3 மணிநேரத்தில் சார்ஜ் செய்ய முடியும்.
ஸ்டோரேஜ் மற்றும் விலை
பிளாக், லிலாக், ஓஷன் ஆகிய மூன்று நிறங்களில் வெளியாகியுள்ள ஃபயர் எச்டி 10 (2023) டேப்லெட் இரண்டு வேரியண்ட்களில் அறிமுகமாகியுள்ளது. அதன்படி, 3 ஜிபி + 32 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 3 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட் உள்ளது. இதில் 32 ஜிபி வேரியண்ட் $154.99 (ரூ.12,901) என்ற விலையிலும், 64 ஜிபி வேரியண்ட் $194.99 (ரூ.16,230) என்ற விலையிலும் அமெரிக்காவில் அமேசானில் விற்பனைக்கு உள்ளது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…