முன்னணி நிறுவனமான அமேசான் நூற்றுக்கணக்கான பணியாளர்களை பணிநீக்கம் செய்ய முடிவு?
அமேசான் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமான அமேசான் நூற்றுக்கணக்கான பணியாளர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக, தெரிவித்துள்ளார்.
இந்த பணி நீக்க நடவடிக்கையால் அமேசானில் பணியாற்றும் எந்தப் பிரிவு ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரியவில்லை.கடந்த ஆண்டில் இந்நிறுவனம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியதுடன், வட அமெரிக்காவில் மற்றொரு தலைமையகம் திறக்கவும் திட்டமிட்டது. ஆனால் கணினியில் குரல் மூலம் கட்டளையிடுவது போன்ற புதிய தொழில்நுட்பங்கள் புகுந்து வரும் நிலையில், இந்த ஆண்டு வர்த்தகத்தில் இத்தனை பணியாளர்கள் தேவையில்லை என்று அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.