‘நத்திங் போன் 2’ ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே அளவு மற்றும் பேட்டரி திறன் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது
நவீன தொழில்நுட்ப காலத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாடுகள் வளர்ச்சி அடைந்து வருகிறது. ஒவ்வொரு ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமும் போட்டிபோட்டுக்கொண்டு பயனர்களிடையே தங்களது தயாரிப்புகளை கொண்டுபோய் சேர்ப்பதற்கு பல புதுப்பிப்புகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்தவகையில், நத்திங் டெக்னாலஜி அதன் ஸ்மார்ட்போனின் வெளிப்படையான பின்புறத்தைக் கொண்டு மக்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. நத்திங் போன் 1 (Nothing Phone 1) அறிமுகமானது பயனர்களிடையே அதிக பரபரப்பைக் கண்டாலும், கேமராவின் தரம் போன்ற வழக்கமான சிக்கல்கள் இருந்து வந்தது.
அதனை பூர்த்தி செய்யும் விதமாக நத்திங் போன் 2 (Nothing Phone 2) ஸ்மார்ட்போன், வரும் ஜூலை மாதத்தில் உலக அளவில் அறிமுகப்படுத்தபடும் என்று தலைமை நிர்வாக அதிகாரி கார்ல் பெய் அறிவித்திருந்தார். அதன்படி, தற்பொழுது நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே அளவு மற்றும் பேட்டரி திறன் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
Nothing Phone 2 டிஸ்ப்ளே:
நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே அளவு, அதன் முதல் போனை விட 0.15 இன்ச் பெரியதாக இருக்கும். அதாவது, நத்திங் போன் 1-ன் டிஸ்பிளே 6.55 இன்ச் இருக்கும். ஆனால், நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும். இந்த டிஸ்ப்ளே AMOLED பேனல் மற்றும் FHD+ தெளிவுத்திறனுடன் இருக்கும். மேலும் 120Hz ரெபிரேசிங் ரேட்டையும் கொண்டிருக்கலாம்.
Nothing Phone 2 பேட்டரி:
இதன் பேட்டரி ஆனது நத்திங் போன் 1-ஐ விட 200mAh அதிகமாக இருக்கும். அதாவது, நத்திங் போன் 1 -ல் 4,500mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். ஆனால், நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் 4,700mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். இதனால் அதிக நேரம் ஸ்மார்ட்போனை பயன்படுத்த முடியும்.
கார்பன் தடம் (Carbon footprint):
ஸ்மார்ட்போனில் கார்பன் உமிழ்வை மதிப்பிட்டு உண்மையான கார்பன் தடத்தை அளவிடும் SGS SA சான்றளிக்கப்பட்ட, நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் 53.45 கிலோ கார்பன் உமிழ்வை கொண்டுள்ளது. இது நத்திங் போன் 1-ஐ விட 5 கிலோ குறைவாக உள்ளது.
பாகங்கள் தயாரிக்க பயன்பட்ட பொருட்கள்:
நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனில் 3 மடங்கு அதிக மறுசுழற்சி செய்யப்பட்ட பாகங்கள் உள்ளன. இதில் உள்ள 9 சர்க்யூட் போர்டுகளில் 100% மறுசுழற்சி செய்யப்பட்ட தகரம் மற்றும் மெயின் சர்க்யூட் போர்டில் 100% மறுசுழற்சி செய்யப்பட்ட காப்பர் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அனைத்து ஸ்டாம்பிங் பாகங்களிலும் 90% க்கு மேல் மறுசுழற்சி செய்யப்பட்ட எஃகு பயன்டுத்தப்பட்டுள்ளது.
சாப்ட்வேர் அப்டேட்:
ஆண்ட்ராய்டு 13 உடன் வரவுள்ள நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனிற்கு 3 வருட ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட் வழங்கப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
கேமரா மற்றும் நினைவகம்:
நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் 50MP முதன்மை கேமராவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 8ஜிபி ரேம் + 128ஜிபி நினைவகம், 8ஜிபி ரேம்+ 256ஜிபி நினைவகம், மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி நினைவகம் ஆகிய மூன்று வகைகளில் அறிமுகப்படுத்தப்படும்.
Nothing Phone 2 ப்ராசசர் மற்றும் விலை:
இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 SoC (Qualcomm Snapdragon 8+ Gen 1 SoC) மூலம் இயக்கப்படும் உயர்தர சிப் பயன்படுத்துவதால், நத்திங் போன் 2 போனின் விலை, முதல் போனை விட அதிகமாக இருக்கும். இந்தியாவில் நத்திங் போன் 1-ன் ஆரம்ப விலை ரூ.32,999 என அறிவிக்கப்பட்டது. நத்திங் போன் 2- விலை ரூ.40,000-க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…