ஆப்பிள் விஷன் ப்ரோவின் அசத்தலான சிறப்பம்சங்கள்!
ஒவ்வொரு முறையும் ஆப்பிள் நிறுவனம் தனது ஒரு புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்தும்போது, அது சமூகவலைத்தளங்களில் பேசும்பொருளாக மாறும். அப்படி ஒரு பொருளை பற்றி தான் தற்போது பேசப்பட்டு வருகிறது. அதாவது, சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட, விஷன் ப்ரோ ஹெட்செட் + கண்ணாடி (Apple Vision Pro) தற்போது சந்தைக்கு விற்பனைக்கு வந்து உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக பெரிதாக புதிய படைப்புக்களை வெளியிடாத நிலையில், தற்போது வெளியிட்டு இருக்கும் புதிய டெக்னாலஜிதான் இது. இது டெக் உலகில் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது என்றே கூறலாம். பலரும் சாலைகளில் மாட்டிக்கொண்டு, தனி உலகத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.
ஏனெனில், ஆப்பிள் விஷன் ப்ரோ ஆக்மென்ட் ரியாலிட்டி (AR) மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி (VR) ஆகியவற்றைக் கொண்டிருப்பதால், மிக பிரமாண்டமாக இருக்கும் என கூறப்படுகிறது. அதன்படி, அதன் விலை 3,500 அமெரிக்க டொலர் (சுமார் ரூ. 3 லட்சம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட்டின் சிறப்பம்சங்கள்:
ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட் முப்பரிமாண டிஜிட்டல் உள்ளடக்கத்தை வெளியுலகின் பார்வையுடன் வழங்கும்படியான சிறப்பம்சத்துடன் வடிவமைத்துள்ளது. இது ஆப்பிளின் M2 சிப்பில், விஷன் OS இயங்குதளத்தில், 256GB ஸ்டோரேஜ் அம்சத்துடன் இயங்குகிறது. இதனை பயனர்கள் தங்களுடைய தொடுதல், குரல் மற்றும் கண் அசைவுகள் மூலம் இயக்கி கொள்ளலாம்.
ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட்டில் ஆக்மென்டட் ரியாலிட்டி(AR), விர்ச்சுவல் ரியாலிட்டி(VR) அம்சங்களுடன் செயற்கை நுண்ணறிவு அம்சமும் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட்டில் 4K டிஸ்பிளே, கேமரா, மைக்ரோபோன்கள் மற்றும் சென்சார்கள் ஆகியவை உள்ளன.
இதில் விஆர் கண்ணாடி என்பது நாம் பார்க்கும் விஷயங்கள் எல்லாம் கற்பனை. விஆர் கண்ணாடிகள் கடந்த 5-6 வருடங்களாகவே பிரபலமாக இருக்கின்றன. ஆனால், ஏஆர் கண்ணாடிகள் என்பது கற்பனை அல்ல, நிஜம். நீங்கள் உங்கள் செயலிகளை பயன்படுத்துவதற்கு பதில் கண்ணாடியை அணிந்தால்போதும் அதை வைத்தே எங்கிருந்தும் உங்கள் பணிகள் அனைத்தும் முடிக்க முடியும்.
ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட்டை அணிந்து படம் பார்க்க முடியும். அதில் இருக்கும் செயலிகளை உங்கள் கண்ணாடி வழியாக இயக்க முடியும். அதாவது, விஆர் கேமராவில் வெறுமனே வீடியோ மட்டுமே ஓடும். ஆனால், இதில் ஸ்மார்ட் போன் அல்லது ஸ்மார்ட் கணினி போல பயன்படுத்த முடியும். உதாரணமாக நீங்கள் படம் பார்க்க நெட்பிளிக்சை இந்த கண்ணாடியில் திறந்து பார்க்க முடியும்.
இதனை அணிந்து இருக்கும் போது உங்கள் கையை தூக்கி நீங்கள் இங்கும், அங்கும் ன்று நகர்த்தினால் அதில் உள்ள மெனு பட்டன்கள் நகரும் அல்லது உங்கள் குரலில் என்ன வேண்டும் என்பதை தெரிவித்தால் அது கண்முன்னே வரும். ஸ்கிரீன் தேவை இல்லை. உங்கள் அறைக்கு ஏற்றபடி அதுவே கலர் மற்றும் வெளிச்சத்தை மாற்றிக்கொண்டு ஹோம் தியேட்டரில் படம் பார்ப்பது போன்ற அனுபவத்தை இது கொடுக்கும்.
படம் மட்டுமல்ல கணினியில் செய்ய கூடிய அனைத்தையும் இதன் மூலம் செய்யலாம். இதற்கு நீங்கள் உங்கள் கண் அசைவுகளை பயன்படுத்தி கட்டளை கொடுக்கலாம். இதனை அணிந்து கொண்டால் தனியாக ஸ்கிரீன் எதுவும் பயன்படுத்த தேவை இல்லை. நம்மை சுற்றி இருக்கும் பகுதிகளையே அது ஸ்கிரீனாக பயன்படுத்தும். கண்ணாடிக்கு வெளியே வீடியோ காட்சி தோன்றுவது போல உங்களுக்கு காட்சி அளிக்கும்.
ஆனால் வெளியே இருப்பவர்களுக்கு நீங்கள் வெறும் கண்ணாடி அணிந்து இருப்பது போல மட்டுமே தெரியும். மேலும், விஷன் ப்ரோ முன்பு இல்லாத வகையில் விளையாட்டுகளைப் பார்க்கவும், பல விளையாட்டுகளை ஸ்ட்ரீம் செய்யவும் அனுமதிக்கிறது. அதுவும், ஒரே நேரத்தில் கிரிக்கெட், எஃப்1 ரேஸ் மற்றும் கால்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை பார்க்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.