அலோ அப்ளிகேஷனுக்கு பதிலாக வருகிறது செட்ஸ் அப்..!கூகிள் நிறுவனம் தகவல்..!

Default Image

கூகுள் நிறுவனம், அலோ அப்ளிகேஷனின் மேம்பாட்டை முட்டுக்கட்டை போட்டுள்ள நிலையில் , அதற்கு பதிலாக ஆன்ட்ராய்டு மெசேஜஸ் அப்ளிகேஷனின் உருவாக்கத்தில் தனது இன்ஜினியர்களைப் பணியமர்த்தி, அதற்கு ‘செட்ஸ்’ என்று பெயரிட்டுள்ளது.

 கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது அலோ என்ற மெசேஞ்ஜர் அப்ளிகேஷனை, கூகுள் நிறுவனம் வெளியிட்டது. இந்த அப்ளிகேஷன், ஆன்ட்ராய்டு ஃபோன்களுக்கான ஐமெசேஜ் ஊடகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் ஒரு கச்சிதமான மெசேஜிங் அப்ளிகேஷனாக அலோ மெசேஞ்ஜரை, கூகுள் நிறுவனம் விளம்பரம் செய்தது.
இதில் ஸ்டிக்கர்கள், ஜிஐஎஃப்-கள் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் காணப்பட்டதோடு, இது ஒரு வெப்-கிளையன்ட் ஆகவும் இருந்தது.

ஆனால் தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ள சில தகவல்களின் அடிப்படையில், அலோ அப்ளிகேஷனின் மேம்பாட்டை நிறுத்தி வைத்துள்ள கூகுள் நிறுவனம், அதற்கு பதிலாக ஆன்ட்ராய்டு மெசேஜஸ் அப்ளிகேஷனின் உருவாக்கத்தில் தனது இன்ஜினியர்களைப் பணியமர்த்தி உள்ளதாகத் தெரிகிறது.

 ஐபோன் பயனர்கள் ஐமெசேஜ் அளிக்கும் உள்ளடக்கத்தை பயன்படுத்தியதும் ஆன்ட்ராய்டு பயனர்கள் மெசேஜிங் அப்ளிகேஷன்களான வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்றவற்றை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தது எல்லாரும் அறிந்ததே. எனவே ஒரு சாதாரண செட் அப்ளிகேஷனைக் காட்டிலும் தனது தளத்தில் சிறந்த ஒன்றை பயனர்களுக்கு அளித்தால் மட்டுமே கூகுளின் இந்த தளத்திற்கு பயனர்களை கொண்டு வர முடியும். அதில் ஆன்ட்ராய்டு மெசேஜஸ் உள்ளிட்ட ஆர்சிஎஸ் ஆகியவற்றை கூறலாம்.

இணையதளத்தில் வெளியான சில தகவல்களின் அடிப்படையில், தனது புதிய தயாரிப்பிற்கு ‘செட்’ என்று கூகுள் பெயரிட்டுள்ளதாகவும், இந்த தொழில்நுட்ப ஜாம்பவானின் தயாரிப்பான ஹேங்அவுட் செட் போல இல்லாமல், ஒரு வித்தியாசமான அப்ளிகேஷனாக இருக்கும் என்றும் தெரிவிக்கின்றன. அந்த தகவல்களில்படி, கூகுள் நிறுவனத்தால் அலோ நிறுத்தப்பட போவதில்லை என்பதால் அதை பயன்படுத்துபவர்கள் நிம்மதி பெருமூச்சு விடலாம்.
தற்போதைக்கு அலோவின் மேம்பாடு மற்றும் முதலீட்டை நிறுத்தி வைத்துள்ள கூகுள் நிறுவனம், தான் நினைத்துள்ள இந்த ‘செட்’ அப்ளிகேஷனின் வெளியீடு மீது கவனம் செலுத்தி வருகிறது. அதே நேரத்தில் அலோ அப்ளிகேஷனுக்கு புதுப்பிப்புகள் ஏதாவது இனி வெளியிடப்படுமா அல்லது கூகுள் ஹேங்அவுட்ஸை போல மந்தமான நிலையை எட்டுமா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்