“தல” அஜித்தின் பொழுதுபோக்கு இதுவா..? அப்படி என்ன ரகசியம் உள்ளது அதில்..??

Default Image

தமிழ் சினிமாவின் “தல” அஜித்திற்கும் ஆட்டோமொபைல் துறைக்கும் உள்ள சம்மந்தம் பற்றி எல்லோருக்குமே தெரியும், அவர் சினிமா மட்டுமின்றி கார் ரேஸ், பைக் ரேஸ் என்று கலக்கியவர்.அவர் அதில் பல சாதனைகளும் படைத்தார்.

இந்தியாவில் இருந்து பார்முலா கார் ரேஸில் கலந்து கொண்ட வெகு சிலரில் நடிகர் அஜித்தும் ஒருவர். மேலும் 2003ல் நடந்த பார்முலா ஏசியா பிஎம்டபிள்யூ சாம்பியன்ஷிப் என்ற சர்வதேச போட்டியிலும், 2010ல் நடந்த சர்வதேச பார்முலா 2 போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். 2002ல் நடந்த பார்முலா மாருதி இந்தியன் சாம்பியன் ஷிப் போட்டியில் கலந்து கொண்ட நடிகர் அஜித் குமார் போட்டியில் 4வதாக வந்து அசத்தினார். இதற்கு பிறகு தான் 2003 பார்முலா ஏசியா பிஎம்டபிள்யூ போட்டிக்கான வாய்ப்பே கிடைத்தது.

கடந்த 2010ல் சென்னையில் நடந்த பார்முலா 2 சாம்பியன் ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக இயக்குநர் கவுதம் மேனனுடன் அவர் நடிக்கவிருந்த படத்தின் வாய்ப்பும் தள்ளி போனது.

இதையடுத்து அவருக்கு ஏற்பட்ட சில அறுவை சிகிச்சைகளுக்கு பின் நடிகர் அஜித் குமார் கார், பைக் ரேஸிங்கில் கலந்து கொள்ளமுடியாமல் போனது.

அஜித் குமாருக்கு விமானம் மற்றும் ஹெலிகாப்டர் மீது ஆர்வம் ஏற்பட்டது. அவர் வீட்டில் ரிமோட் மூலம் இயங்ககூடிய சிறிய ரக ஹெலிகாப்பர்களை தயாரிப்பதை பொழுதுபோக்காக செய்து வருகிறார். அவர் செய்த சிறிய விமானம் ஒன்று தமிழில் வெளியான வாமனன் என்ற படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

அஜித் குமாருக்கு விமானம் மற்றும் ஹெலிகாப்டர் மீது ஆர்வம் ஏற்பட்டது.அவர் இயக்கம் மற்றொரு விமானத்தின் புகைப்படமும் உள்ளது.

 

 

 

இந்நிலையில் தல அஜித் தான் புதிதாக வாங்கிய ரிமோட் மூலம் இயங்கும் ஹெலிகாப்டருடன் எடுக்கப்பட்ட படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக வருகிறது.

இந்த சிறிய ரக ஹெலிகாப்டர்கள் பெரிய ஹெலிகாப்டர்கள் இயங்கும் அதே தொழிற்நுட்பத்தில் இயங்குபவை, இதை இயக்குவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

தற்போது வெளியான புகைப்படத்தில் அஜித் ஃபிளாக் தண்டர் 700 என்ற ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும் ஹெலிகாப்டருடன் இருக்கிறார். இந்த ஹெலிகாப்டர் சமீபத்தில் தான் விற்பனைக்கு வந்தது. இந்த ஹெலிகாப்டரில் மேட் பிளாக் ரோட்டார் ஹேட், உயர் ரக கார்பனால் விடிவமைக்கப்பட்ட மேல்புறம் மற்றும் பின்புறம் உள்ள பிளேடுகள், குறைந்த எடை கொண்ட ஹெலிகாப்டர் பாடி, 1.5மி.மீ. அளவு கொண்ட பாடி பிரேம், ஒரே பீஸ் டெயில், சி.என்.சி., கியர், அதிக தூரம் இயங்கும் சக்தி கொண்ட ரிமோட் செட்டப், விரைவாக செட்டப் செய்யக்கூடிய வகையிலான இன்ஸ்டாலேஷன், ஆகிய அம்சங்களை உள்ளடக்கியது.

இந்த ஹெலிகாப்டரில் ரோட்டர், மெயின் கியர் ஆகிவற்றிற்கான ஒரே பவர் சப்ளே சிஸ்டம், மோட்டாருக்கும் ரோட்டாருக்குமிடையே 2 பெல்ட் சிஸ்டம் இதன் மூலம் பறக்கும் போது ஒரு பெல்ட் அறுத்தாலும் ஹெலிகாப்டரை கீழே விழாமல் காப்பாற்றலாம்.

இதன் ஸ்பீடும், பவரும் மற்ற குட்டி ஹெலிகாப்டரை காற்றிலும் அதிகமாக இருக்கும், சிஎன்சி முறையில் வடிவமைக்கப்பட்ட ரோட்டார், குறைந்த எடையிலான பாடி, வைபரேஷனை கட்டுப்படுத்த பின்பக்கம் தனியாக ரோட்டார் என சிறிய ரக ஹெலிகாப்டர் ரசிகர்களை ஏக குஷிப்படுத்தும் விதத்தில் உள்ளது .

இந்த ஹெலிகாப்ரை நாம் முழுமையாக வடிவமைத்து முடிக்க 7 சேனல் கொண்ட 2.4 ஜிகாகெட்ஸ் டிரான்ஸ்மிட்டர் மற்றும் ரிசிவர், 4035-4525,500-560 கேவி எலெக்ட்ரிக் மோட்டார், அதிக டார்க் திறன் கொண்ட மூன்று சைக்கிலிக் சர்வோஸ், 1 டெயில் ரோட்டர் சார்வோ, 4000-5000 எம்ஏஎச் பேட்டரி, 3 ஆக்ஸில் பிளை பேர்லெஸ் சிஸ்டம், என சில பெருட்களும் தேவைப்படும்.

இவை அனைத்தையும் பொருத்தி முழுமையாக வடிவமைக்கப்பட்ட ரிமோட் மூலம் இயங்கும் பிளாக் தண்டர் 700 ரக ஹெலிகாப்டருடன் தான் அஜித்குமார் போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார்.

இதன் விலை இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ70,000. இந்த விமானத்தை அவரே இயக்க போகிறா, மற்றவர்களை இயக்க வைத்து இயக்கபோகிறாரா என்பது தெரியவில்லை.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்