ஏர்டெல் தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, அதன்படி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு போட்டியா ஏர்டெல் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பாக இப்போது அறவித்துள்ள திட்டம் பல்வேறு பயனர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் நிறுவனம் தற்சமயம் ரூ.49-கட்டணத் திட்டத்தில் அதிரடி திருத்தம் கொண்டு வந்துள்ளது, அதன்படி ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ரூ.49-க்கு ரீசார்ஜ் செய்தால் 3ஜிபி 4ஜி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் ஒரு நாள் வேலிடிட்டி கொண்டவையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் நிறுவனம் தற்சமயம் ரூ.249/-திட்டத்தை அறிவித்துள்ளது, இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டாவை மட்டுமே பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏர்டெல் ரூ.249/- ஆனது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் ரோமிங் உட்பட வரம்பற்ற வாய்ஸ் மற்றும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளையும் வழங்குகிறது.
சமீபத்தில், ஏர்டெல் ரூ.499/- அறிமுகமானதும் அது ஒரு நாளைக்கு 2 ஜிபி தரவு, வரம்பற்ற வாய்ஸ், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நண்மைகளை மொத்தம் 82 நாட்களுக்கு வழங்கி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் ரூ.349/- திட்டமானது தற்போது முந்தைய 70ஜிபி அளவிலான டேட்டாவில் இருந்து 84 ஜிபி டேட்டாவை வழங்கும் திட்டமாக மாறியுள்ளது. இந்த திட்டமும் மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் ரூ.349/-ன் இதர நன்மைகளை பொறுத்தவரை, ஜியோ போன்றே ரோமிங் உட்பட வரம்பற்ற வாய்ஸ் மற்றும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவைகளை வழங்குகிறது.
சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற…
சென்னை :நெல்லிக்காய் குல்கந்து தித்திக்கும் சுவையில் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; நெல்லிக்காய்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. சொல்லப்போனால், கடந்த மூன்று…
சென்னை: சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் திடீரென எண்ணூரில் நிறுத்தப்பட்டது. இதனால், சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தின் ரயில்…
கோவை : காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர்,…
நவி மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி0 போட்டிகள், 3…