ஜியோக்கு போட்டி.. நெட்ஃபிளிக்ஸ் சந்தாவுடன் ப்ரீபெய்ட் திட்டம்.! ஏர்டெல் நிறுவனம் அசத்தல்.!
இந்தியாவின் முன்னணி டெலிகாம் ஆபரேட்டர்களாக இருக்கும் ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகும். இந்த இரண்டு நிறுவனங்களும் இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு 5ஜி இணைப்பை வழங்கக்கூடிய ஆபரேட்டர்கள் ஆவர். இவை அடிக்கடி பயனர்களுக்காக புதிய ப்ரீபெய்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில், தற்போது ஏர்டெல் நிறுவனம் நெட்ஃபிலிக்ஸ் சந்தா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுடன் கூடிய புதிய ப்ரீபெய்டுத் திட்டத்தை இந்தியாவின் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. நெட்ஃபிலிக்ஸ் சந்தாவுடன் வரும் ஏர்டெல்லின் முதல் ப்ரீபெய்ட் திட்டம் இதுவாகும்.
50எம்பி கேமரா..5,000mAh பேட்டரி.! சத்தமில்லாமல் அறிமுகமான டெக்னோவின் புதிய மாடல்.?
முந்தைய ப்ரீபெய்ட் திட்டங்களில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் சந்தா மட்டுமே வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின் விலை ரூ.1,400 ஆகும். இதற்கு 84 நாட்கள் வரை வேலிடிட்டி உள்ளது. அதோடு அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 3ஜிபி வரை 4ஜி டேட்டாவை வழங்குகிறது.
இதில் நெட்ஃபிலிக்ஸ் சந்தா வசதியும் உள்ளது. இந்த திட்டத்தில் நெட்ஃபிலிக்ஸை ஒரே நேரத்தில் ஒரு சாதனத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். இருப்பினும், மடிக்கணினி, ஸ்மார்ட்போன், டேப்லெட் அல்லது டிவி போன்ற எந்த சாதனத்திலும் இதைப் பயன்படுத்தலாம். இதனுடன் 3 மாத அப்பல்லோ மருந்தாக சேவை, இலவச ஹலோ டியூன் போன்றவையும் உள்ளன.
உலகளவில் களமிறங்கும் ஒன்பிளஸ் 12.! எப்போ தெரியுமா.?
மறுபுறம் ஜியோவும் இலவச நெட்ஃபிளிக்ஸ் சந்தாவுடன் வரும் இரண்டு திட்டங்களை வழங்குகிறது. அதில் ஓன்று ரூ.1,099 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டம். இத்திட்டம் பயனர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ரூ.1,499 திட்டமானது தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த இரண்டு திட்டங்களிலும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை செய்ய முடியும்.
இந்த இரண்டு ஜியோ திட்டங்களிலும் முன்பு கூறப்பட்டபடி நெட்ஃபிளிக்ஸ்-ன் அடிப்படை சந்தா சேவை அடங்கும். ஏர்டெலின் திட்டத்தைப் போலவே, இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களும் ஒவ்வொன்றுக்கும் 84 நாட்கள் வேலிடிட்டி உள்ளது. ஜியோ திட்டங்கள் தினசரி டேட்டா பேக்கிற்கு மேல் அன்லிமிடெட் 5G டேட்டாவையும் வழங்குகிறது