புதிய ஹோம் பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது ஏர்டெல் நிறுவனம்..!!
பார்தி ஏர்டெல்,மற்ற நிறுவனங்களுடன் போட்டிபோடும் முனைப்பில் அதன் 300 எம்பிபிஎஸ் வேகத்திலான புதிய ஹோம் பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதுதான் தற்போது வரையிலாக ஏர்டெல் வழங்கி வரும் மிக வேகமான பிராட்பேண்ட் திட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு மாத காலம் செல்லுபடியாகும் இந்த 300 எம்பிபிஎஸ் வேகத்திலான திட்டமானது, ரூ.2199/- என்கிற மதிப்பை கொண்டுள்ளது. நன்மைகளை பொறுத்தவரை, வரம்பற்ற எஸ்டிடி / லோக்கல் அழைப்புகள் உட்பட 1200ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவை வழங்குகிறது.
மேலும், வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தினைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஏர்டெல் நிறுவனத்தின் OTT பயன்பாடுகளுக்கான இலவச சந்தாவையும் அணுகலாம். அதாவது – Wynk Music and Airtel TV போன்றவைகளின் பயன்களையும் அனுபவிக்கலாம்.
வின்க் மியூசிக் ஆப் ஆனது தன்னுள் மூன்று மில்லியன் பாடல்களைக் கொண்டுருக்க, அதே நேரத்தில் ஏர்டெல் டிவி ஆனது 350-க்கும் மேற்பட்ட நேரடி தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் 10,000/-க்கும் மேற்பட்ட திரைப்படம் மற்றும் டிவி நிகழ்ச்சிகளை தன்னுள் கொண்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 1200ஜிபி என்கிற அளவிலான டேட்டாவானது, இது ஒரு ஹோம் பிராட்பேண்ட் பயனர்களுக்கு போதுமானதாக உள்ளது. இருப்பினும் கூட, வரம்பற்ற டேட்டா என்கிற வாய்ப்பு அறிவிக்கப்பட்டு இருந்தால், அது இன்னும் சிறப்பான திட்டமாக இருந்திருக்கும்.
புதிதாக தொடங்கப்பட்ட இந்த 300 எம்பிபிஎஸ் வேகத்திலான பிராட்பேண்ட் திட்டத்தின் விலையானது, வட்டத்திற்கு வட்டம் மாறுபடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஹைதராபாத்தில், தற்போது ரூ.2199/-க்கு கிடைக்கிறது. ஆக ரீசார்ஜ் செய்யும் முன் ஒன்றுக்கு இரண்டுமுறை, நன்மைகளை பரிசோதித்துக் கொள்ளவும்.