ஏர்டெல் கொண்டுவந்த அதிரடி திட்டம்! குஷியில் பயனர்கள்!
மொபைல் ஆபரேட்டர் நிறுவனமான ஏர்டெல் அவர்களது பயனர்களுக்கு பயன்படும் வகையில் புதிதாக காப்பீடு திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
டெல்லி : கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏர்டெல், ஜியோ போன்ற நிறுவனங்கள் அதன் கட்டண சேவையை உயர்த்தி பயனர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்கள். இதனால் பயனர்களும் தங்களுக்கு ஏற்றவாறு பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறத்தொடங்கினார்கள். இதனால், ஏர்டெல் மற்றும் ஜியோ சரிவைக் காண தொடங்கியது.
இந்த நிலையில் இருக்கும் பயனர்களை ஈர்க்க வேண்டும் எனவும், பயனர்களின் எண்ணிக்கை மீண்டும் கூட்டுவதற்கும் பல்வேறு ப்ரீபெய்ட் திட்டங்களை ஏர்டெல், ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்து வந்தது. அந்த வகையில், தற்போது ஏர்டெல் நிறுவனம் ஒரு அடி மேல் சென்று தற்போது புதிய திட்டத்தை பயனர்களுக்கு வழங்கியுள்ளது.
ஏர்டெல் புதிய திட்டம் :
ஏர்டெல் கொண்டுவந்த அந்த திட்டம் என்னவென்றால், ஏர்டெல் நிறுவனத்தை சார்ந்துள்ள பயனர்களுக்காக காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த காப்பீடு திட்டத்தில் விபத்தில் உயிரிழப்போருக்கு ரூ.1 லட்சம் எனவும் விபத்தின் மூலம் காயமடைவோருக்கு ரூ.25,000 என காப்பீடு தொகை வழங்குவதாகவும் ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்துக்கான தகுதி என்ன?
அதன்படி, ஏர்டெலை பயன்படுத்தும் பயனர்கள் ரூ.299, ரூ.399, ரூ.969 ஆகிய 3 ரீசார்ஜ் திட்டங்களில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு விபத்து காப்பீடு தருவதாகவும், ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய திட்டத்தை ஏர்டெல் பயனர்கள் வரவேற்று வருவதுடன் பாராட்டியும் வருகின்றனர்.