ஏர்டெல், ஜியோ பயனர்களே ..! மீண்டும் ரீசார்ஜ் கட்டணம் குறைய வாய்ப்பு!

டெலிகாம் நிறுவனங்கள், ரீசார்ஜ் கட்டணங்களைக் குறைப்பது பற்றித் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

CellPhone Towers

சென்னை : கடந்த ஜூலை மாதம் டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, விஐ போன்ற நிறுவனங்கள் தங்கள்து ரீசார்ஜ் கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தினார்கள். இதனால், பலரும் பிஎஸ்என்எல் நோக்கி பயணிக்கத் தொடங்கினார்கள். மேலும், ஏர்டெல் மற்றும் ஜியோ தங்களது பயனர்களுக்கு பல புதிய ஆஃபர்களை அளித்து வந்தது.

இருப்பினும், பல பயனர்கள் கட்டணத்தை குறைக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். இது தொடர்பாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட பல கேள்வி எழுப்பி இருந்தார்கள். அதற்கு மத்திய அரசு இந்தியாவில் தான் மொபைல் கட்டணம் குறைவாக இருப்பதாக விளக்கம் கொடுத்தார்கள். ஆனால், அதைத் தொடர்ந்தும் பலரும் கட்டணங்களை குறைக்கச் சொல்லி கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில், இதனை எதிர்கொள்ள இப்போது தனியார் டெலிகாம் நிறுவனங்களும் தங்கள் கட்டணங்களைக் குறைப்பது குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்நிறுவனங்களும் மத்திய அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

இப்படி இருந்தாலும் ஒரேடியாக விலை குறைந்து விடும் என்றும் சொல்லிவிட முடியாத என்றே கூறுகின்றனர். அதாவது,டெலிகாம் நிறுவனங்களின் இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றால் மட்டுமே ரீசார்ஜ் கட்டணங்கள் குறையும். எனவும் அதனை மத்திய அரசு ஏற்காவிட்டால் டெலிகாம் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை ஒரு போதும் குறைக்காது எனவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்