இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்து உள்ளது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் ரூ.249 என்ற புதிய திட்டத்தை அறிவித்தது, அதன்பின்பு பல்வேறு டெலிகாம் நிறுவனங்கள் தொடர்ந்து புதிய சலுகையை அறிவித்துள்ளது.
மேலும் இந்த ஏர்டெல் ரூ.249/- திட்டத்தின் சிறந்த பகுதி என்னவென்றால் இதுவொரு திறந்த வெளி சந்தை திட்டமாகும். அதாவது குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டுமே அல்லது குறிப்பிட்ட வட்டங்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்கிற வரம்புகள் இல்லை.
ஐடியாவின் ரூ.249/- திட்டதில் இலவச கால் அழைப்புகள் ரோமிங் போன் சேவைகளையும் பயன்படுத்த முடியும், ஆனால் எஸ்எம்எஸ் சலுகைகள் இந்த திட்டத்தில் அறிவிக்கப்படவில்லை. மேலும் இந்த புதிய திட்டமானது, தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமேகிடைக்கிறது. ஐடியா ரூ.309/- திட்டம்: ஐடியா ரூ.309/- திட்டத்தில் 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது, அதன்பின்பு இந்த திட்டத்தை 28 நாட்கள் பயன்டுத்த முடியும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 100எஸ்எம்எஸ், இலவச கால் அழைப்புகள், போன்றவை இந்த திட்டத்தில் கிடைக்கும். ஏர்டெல் ரூ.249/- ப்ரீபெய்ட் திட்டமானது ஒரு நாளைக்கு 2 ஜிபி அளவிலான டேட்டாவை அளிக்கிறது. மேலும் இந்த திட்டத்தை 28நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.அதே நேரத்தில் திருத்தம் பெற்ற ஏர்டெல் ரூ.349/- திட்டமானது இனி ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும்.
புதிய ஏர்டெல் ரூ.249/- திட்டமானது, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.198/- உடன் நேரடியாக போட்டியிடும் மறுகையில், திருத்தப்பட்ட ஏர்டெல் ரூ.349/- ஆனது ஜியோவின் ரூ.299/-க்கு எதிராக செல்கிறது. 2 ஜிபி டேட்டா என்கிற நன்மையுடன் சேர்த்து, ஏர்டெல் ரூ.249/- ஆனது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் ரோமிங் உட்பட வரம்பற்ற வாய்ஸ் மற்றும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளையும் வழங்குகிறது. அதாவது ஜியோவின் ரூ.198/- திட்டம் போலவே, மொத்தம் 56 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…