ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களுக்கு போட்டியாக களமிறங்கும் ஐடியா ..!!

Default Image

 

இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்து உள்ளது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் ரூ.249 என்ற புதிய திட்டத்தை அறிவித்தது, அதன்பின்பு பல்வேறு டெலிகாம் நிறுவனங்கள் தொடர்ந்து புதிய சலுகையை அறிவித்துள்ளது.

இப்போது ஐடியா நிறுவனம் ரூ.249 என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது இந்த திட்டம் பல்வேறு ஐடியா வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது. இப்போது ஐடியா நிறுவனம் அறிவித்துள்ள ரூ.249 திட்டம் பொறுத்தவரை ஏர்டெல் நிறுவனத்திற்கு போட்டியா வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ஏர்டெல் ரூ.249/- திட்டத்தின் சிறந்த பகுதி என்னவென்றால் இதுவொரு திறந்த வெளி சந்தை திட்டமாகும். அதாவது குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டுமே அல்லது குறிப்பிட்ட வட்டங்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்கிற வரம்புகள் இல்லை.

ஐடியா தற்சமயம் அறிவித்துள்ள புதிய ரூ.249/- ப்ரீபெய்ட் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும், மேலும் இந்த திட்டம் 28 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும், மொத்தமாக 56ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐடியாவின் ரூ.249/- திட்டதில் இலவச கால் அழைப்புகள் ரோமிங் போன் சேவைகளையும் பயன்படுத்த முடியும், ஆனால் எஸ்எம்எஸ் சலுகைகள் இந்த திட்டத்தில் அறிவிக்கப்படவில்லை. மேலும் இந்த புதிய திட்டமானது, தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமேகிடைக்கிறது. ஐடியா ரூ.309/- திட்டம்: ஐடியா ரூ.309/- திட்டத்தில் 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது, அதன்பின்பு இந்த திட்டத்தை 28 நாட்கள் பயன்டுத்த முடியும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 100எஸ்எம்எஸ், இலவச கால் அழைப்புகள், போன்றவை இந்த திட்டத்தில் கிடைக்கும். ஏர்டெல் ரூ.249/- ப்ரீபெய்ட் திட்டமானது ஒரு நாளைக்கு 2 ஜிபி அளவிலான டேட்டாவை அளிக்கிறது. மேலும் இந்த திட்டத்தை 28நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.அதே நேரத்தில் திருத்தம் பெற்ற ஏர்டெல் ரூ.349/- திட்டமானது இனி ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும்.

புதிய ஏர்டெல் ரூ.249/- திட்டமானது, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.198/- உடன் நேரடியாக போட்டியிடும் மறுகையில், திருத்தப்பட்ட ஏர்டெல் ரூ.349/- ஆனது ஜியோவின் ரூ.299/-க்கு எதிராக செல்கிறது. 2 ஜிபி டேட்டா என்கிற நன்மையுடன் சேர்த்து, ஏர்டெல் ரூ.249/- ஆனது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் ரோமிங் உட்பட வரம்பற்ற வாய்ஸ் மற்றும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளையும் வழங்குகிறது. அதாவது ஜியோவின் ரூ.198/- திட்டம் போலவே, மொத்தம் 56 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்