முடிவுக்கு வந்தது ஏர்செல் நிறுவனத்தின் சகாப்தம்? திவாலானதாக அறிவிக்க கோரி மனு…
தேசிய நிறுவன தீர்ப்பாயத்தில், டெலி கம்யூனிகேசனில் பிரபலமான ஏர்செல் நிறுவனம் திவாலானதாக அறிவிக்க கோரி மனுத்தாக்கல் செய்துள்ளது.
டெலி கம்யூனிகேசனில் ஏர்டெல், ஏர்செல், வோடபோன், ஐடியா, ஜியோ போன்ற நிறுவனங்கள் பிரபலமானதாக உள்ளன. இதில் ஏர்டெல் மற்றும் ஏர்செல் போன்ற நிறுவனங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் மத்தியில் பிரபலமானதாக இருந்து வந்தது. மேலும் அதிகமான வாடிக்கையாளர்களும் இதன் நெட்வொர்க்கை பயன்படுத்திவந்தனர்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக ஏர்செல் நிறுவனத்தின் டவர் பல இடங்களில் முடங்கியது. இதனால் ஏர்செல் சிம் கார்டை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அப்பொழுதே ஏர்செல் நிறுவனம் முழுமையாக முடங்கிவிட்டதாக பல்வேறு தகவல்கள் பரவின. ஆனால் அந்த தகவல்கள் எல்லாம் வெறும் வதந்தி என்றும், வழக்கம்போல் தனது வாடிக்கையாளர்களுக்கு சேவையை தொடர்ந்து வழங்கும் என்றும் ஏர்செல் நிறுவனம் அறிவித்திருந்தது.
ஆனால் ஸ்டேட் பேங் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பங் ஆப் பரோடா போன்ற வங்கிகளில் வாங்கிய 15 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்த முடியாததால் தனது நிறுவனம் திவாலானதாக அறிவிக்கக்கோரி தேசிய நிறுவன தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இதனால் ஏர்செல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஏர்செல் நிறுவனத்தின் ஊழியர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் ரீடெய்லர்ஸ் ஆகிய அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.