AI தொழில்நுட்பம் அத்துமீறினால்.. கட்டுப்பாடுகள் கடுமையாகும்.! மத்திய அமைச்சர் எச்சரிக்கை.!
AI தொழில்நுட்பமானது, மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். – மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான AI தொழில்நுட்பத்தின் தாக்கம் தற்போது தொழில்நுட்ப உலகில் மிகபெரிய சக்தியாக உருவெடுத்து வருகிறது. இதன் வரவு காரணமாக வேலைப்பளூ குறைக்கப்படுவதாக கூறினாலும் அதனால் பலர் வேலை இழக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் AI தொழில்நுட்பத்தில் கட்டுப்பாடுகள் விதிக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. தற்போது அந்த கட்டுப்பாடுகள் குறித்து, மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவு அமைச்சர் ரீஜிவ் சந்திரசேகர் பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், AI தொழில்நுட்பமானது, மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டால், உடனடியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு AI தொழில்நுட்பம் ஒழுங்குபடுத்தப்படும் என தெரிவித்தார். மேலும், தனிநபர் சுதந்திரத்தில் தலையிடும் இணையவாசிகள் நடவடிக்கையை கட்டுப்படுத்த மாநில அரசுகள் மத்திய அரசுடன் கூட்டாக இணைந்து செய்லபட வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வலியுறுத்தி உள்ளார்.