அடேங்கப்பா..32 நபர்களுடன் ஒரே நேரத்தில்..! வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்..!

WhatsApp Video call

வாட்ஸ் அப் நிறுவனம் 32 பேர் ஓரே நேரத்தில் வீடியோ கால் செய்யும் அம்சத்தை வெளியிட்டுள்ளது.

உலகில் பல மில்லியன் பயனர்கள் பயன்படுத்தும் செய்தி தளமான மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப், அவ்வப்போது தங்களது செயலியில் பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி பயனர்களை பெருமளவில் அதன்பக்கம் ஈர்த்து வருகிறது.

அந்தவகையில், வாட்ஸ் அப் அதன் விண்டோஸ் பயனர்களுக்காக புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது. இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் 32 நபர்களுடன் ஒரே நேரத்தில் வீடியோ கால் செய்ய முடியும். முன்னதாக, 8 பேர் வரையிலான குரூப் வீடியோ கால், 32 பேர் வரையிலான ஆடியோ கால் செய்யமுடியும்.

ஆனால், இப்போது 32 பேர் ஓரே நேரத்தில் நேரடியாக அல்லது குரூப் மூலம் வீடியோ கால் செய்யமுடியும். தற்பொழுது இந்த அம்சம் பீட்டா பயனாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இந்த அம்சத்துடன் பயனர்கள் வீடியோ அழைப்பின் போது தங்கள் மொபைல் திரையையும் காட்ட முடியும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்