அதிரடி லுக் .. அட்டகாசமான விலை! ரியல்மி களமிறக்கும் அடுத்த மொபைல் !!

Realme Narzo 70 5G

Realme Narzo 70 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த மொபைலான ரியல்மி நார்ஸோ 70 5G மற்றும் ரியல்மி நார்ஸோ 70x 5G என்ற இரு போன்களை வெளியிடும் தேதியை அறிவித்துள்ளது.

ரியல்மி நிறுவனம் நேற்றைய நாளில் ரியல்மி P சீரிஸ் போனை வெளியிட்டது. அந்த போன் நல்ல வரவேற்பை பெற்று தற்போது ஃபிலிப்கார்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரியல்மி தங்களது அடுத்த போனான ரியல்மி நார்ஸோ 70 5G, ரியல்மி நார்ஸோ 70x 5G என்ற மொபைல் போனை நாளை பகல் 12 மணி அளவில் வெளியிட உள்ளனர்.

இந்த போனின் அமைப்பு, சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை விவரங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

Realme Narzo 70 5G
Realme Narzo 70 5G

அமைப்பு 

ரியல்மி நார்ஸோ 70 5G போன் மீடியாடெக் டைமென்சிட்டி 7050 5G சிப்சேட்டை உள்ளடக்கி உள்ளது. அதே போல் ரியல்மி நார்ஸோ 70x 5G ஆனது மீடியாடெக் டைமென்சிட்டி 6100+ உள்ளடக்கி உள்ளது. இந்த சிப் டைமென்சிட்டி 7050 5G விட வேகமாக செயல் படக்கூடியதாகும்.

Realme Narzo 70 5G
Realme Narzo 70 5G

தட்டையான விளிம்புகளுடன் போனின் டிசைன் உள்ளது. போனின் பின்னில் பெரிய வட்டமான டிசைனில் 4 கேமரா அதற்குள் சுற்றி, ஒரு அழகான பிம்பத்தில் போனின் பின்புறத்தை உருவாக்கி உள்ளனர். மேலும், முன்பக்கத்தில் உள்ள ஸ்க்ரீனின் மேல்நடுவில் ஒரு சிறிய பஞ்ச்-ஹோல் கேமராவுடன்  வடிவமைப்புக்கப்பட்டுள்ளது

சிறப்பு அம்சங்கள்

ஸ்க்ரீன் (Screen)

ரியல்மி நார்ஸோ 70 5G போன் Realme ஃபோனை 120Hz AMOLED திரையுடன் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனருடன் உருவாகி உள்ளது. அதே போல  ரியல்மி நார்ஸோ 70x 5G 6.72-இன்ச் FHD+ IPS LCD பேனலுடன் உருவாகி உள்ளது. இதனால் 12K வீடியோவை நாம் இந்த  ரியல்மி நார்ஸோ 70x  போனில் எதிர்ப்பார்க்கலாம்.

சார்ஜ் மற்றும் பேட்டரி

ரியல்மி நார்ஸோ 70 5G போன் Realme ஃபோனை 120Hz AMOLED போன்களும் 45W SUPERVOOC சார்ஜிங் ஆதரவுடன் 5,000 mAh பேட்டரியுடன் உருவாகியுள்ளது. கடந்த ரியல்மி யின் போனான ரியல்மி P சீரிஸ்ஸின் பேட்டரி அம்சங்களும் இது போன்று தான் வெளியானது. அதனால் இந்த போன்களிலும் இத்தகைய அம்சங்களை எதிர்பார்க்கலாம். இதன் மூலம் ரியல்மி பேட்டரியில் பெரிதளவு கவனம் செலுத்துவதில்லை என்பது தெரிகிறது.

Realme Narzo 70 Pro 5G
Realme Narzo 70 Pro 5G

கேமரா 

இந்த இரண்டு போன்களின் காமெராவின் அம்சங்களும் ஒரே போன்று இருக்கலாம் என்று எதிர்ப்பார்க்க படுகிறது. அது பின் கேமராவில்  50MP + 2MP யும், முன்பக்கத்தில் 8MP செல்ஃபி கேமராவுடன் வரும் என எதிர்ப்பார்க்கலாம்.

வைஃபை, ப்ளுடூத், மற்றும் இன்னும் அதிக அம்சங்களுடன் இந்த போன் வெளியாகிறது. அதே நேரத்தில் களமிறங்கும் போதே ஆண்ட்ராய்டு-14 உடன் வெளியாகிறது மேற்கொண்டு போன் அப்டேட் செய்வதன் வெளியாகும் ஆண்ட்ராய்டு வெர்சன்களும் அப்டேட் ஆகலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விலை மற்றும் சலுகை

ரியல்மி நார்ஸோ 70 5G போன்  இந்தியா மதிப்பில் ரூ.15,000 இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதுவும் ஆஃபர் விலையாக ரூ.2000 சலுகையாக விறக்கப்படலாம் என்றும் தெரிகிறது. அதே போல ரியல்மி நார்ஸோ 70x 5G போன் இந்தியா மதிப்பில் ரூ.12,000-க்கும் கீழ் விறக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.  மேலும், சலுகை தொகையாக ரூ.2000 வரை கழிந்து ரூ.10,000 வரை விற்கப்படலாம் என்றும் பேச்சுகள் நிலவுகிறது.

Realme Narzo 70 Pro 5G
Realme Narzo 70 Pro 5G

ரியல்மி நிறுவனம் இந்த இரு போன்களையும் நாளை (ஏப்ரல்-23) மதியம் 12 மணிக்கு வெளியிடுவார்கள் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதே நேரம் இது ரியல்மி மற்றும் அமேசான் இணையத்தில் விற்பனைக்கு வந்து விடும் ஆனால் எந்த தேதியில் விற்பனைக்கு வரும் என்பதை ரியல்மி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தலே நமக்கு தெரிய வரும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்