ஏசர் இந்தியா நிறுவனம், புதிய ஏசர் ஸ்விப்ட் 5(Acer Swift 5) என்ற லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது. 1 கிலோவிற்கும் குறைவான எடை மட்டுமே கொண்ட லைட்வெயிட் லேப்டாப் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த லேப்டாப்பில் 8வது ஜெனரேசனின் இண்டல்கோர் பவர் உள்ளது என்பது கூடுதல் சிறப்பு. மேலும் இந்த லேப்டாப்பில் விண்டோஸ் ஹலோ சப்போர்ட் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
14 இன்ச் FHD டிஸ்ப்ளே கொண்ட இந்த புதிய லேட்பாப்பில், குறுகிய பெசல் இருக்கும் காரணத்தால் பார்ப்பதற்கு நோட்புக் போன்று 13 இன்ச் டிஸ்ப்ளே போன்று தோற்றமளிக்கும். மேலும் இது பாக்கெட்டில் வைத்து கொண்டு செல்லும் வகையில் வெறும் 14.9 மிமி தடிமன் கொண்டது.
அளவில் சிறியதாக இருந்தாலும் இந்த லேப்டாப்பின் அடிப்பாகத்தில் அல்ட்ராலைட் மக்னீசியம் லித்தியம் கொண்ட உலோகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளதால் கீழே விழுந்தாலும் டேமேஜ் ஆகாது. இந்த உலோகம் லேப்டாப்பை முழுவதுமாக பாதுகாக்கின்றது.
இந்த ஏசர் லேப்டாப்பின் கலர் டெக்னாலஜி குறித்து குறிப்பிடவேண்டுமென்றால் அதிக பிரைட்னெஸ் மற்றும் அனைத்து கலர்களும் தெளிவாக தெரியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் டால்பி ஆடியோ பிரிமியம் டெக்னாலஜி இதில் உள்ளதால் ஆடியோ தரம் உலகத்தரமாக உள்ளது. மேலும் இந்த லேப்டாப்பில் விண்டோஸ் 10 மற்றும் கோர்ட்டோனாவுடன் கூடிய வகையில் தான் வெளிவரும்.
மேலும் இந்த லேப்டாப்பில் 8ஜிபி DDR4 ரேம் மற்றும் 512ஜிபி SDD ஸ்டோரேஜ் கொண்டது. இந்த லேப்டாப்பின் பேட்டரி 8 மணி நேரம் இயங்கக்கூடியது. மேலும் இதில் 2×2 802.11ac வைபை, டூயல் யூஎஸ்பி 3.1 டைப் சி போர்ட் மற்றும் பிங்கர்பிரிண்ட் சென்சார் ஆகியவை உள்ளது.
இந்த லேப்டாப் குறித்து ஏசர் இந்தியா நிறுவனத்தின் சி.எம்.ஓ மற்றும் பிசினஸ் தலைவர் கூறியபோது, ‘ஸ்விஃப்ட் 5 ஸ்விஃப்ட் தொடர் லேப்டாப்புகளில் இந்தியாவில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. இது நம்பமுடியாத 970GMS இல் உலகின் லேசான மடிக்கணினிகளில் ஒன்றாக இருப்பதன் மூலம் மற்றொரு சாதனையாக கருதப்படுகிறது.
இந்த ஏசர் ஸ்விப்ட் 5 லேப்டாப் விலை இந்தியாவில் ரூ.79.999ஆக உள்ளது. ஏசர் நிறுவனத்தின் அதிகாரபூர்வ ஷோரூம்கள் மற்றும் பிற கடைகளிலும் இந்த லேப்டாப் கிடைக்கும்.
Acer Swift 5: Acer Swift 5: Introduction to the New Model Laptop.
சென்னை : தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. முதலில்…
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…