கணக்கு இடைநிறுத்தம்..பயனர்கள் மேல்முறையீடு செய்ய முடியும்..! ட்விட்டர் அறிவிப்பு..!
தங்களின் ட்விட்டர் கணக்குகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டால் பயனர்கள் மேல்முறையீடு செய்ய முடியும் என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது.
ட்விட்டர் பயனர்கள் தங்களின் கணக்குகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டால் மேல்முறையீடு செய்ய முடியும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதைத் தொடர்ந்து புதிய கட்டுப்பாடுகளின் கீழ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த புதிய கட்டுப்பாடுகளின் அடிப்படையில் பயனர்களின் ட்விட்டர் கணக்குகள் தளத்தின் கொள்கைகளை தொடர்ந்து மீறினால் மட்டுமே இடைநிறுத்தப்படும்.
இந்த கொள்கை மீறல்களில், சட்டவிரோதமான உள்ளடக்கம் அல்லது செயல்பாட்டில் ஈடுபடுவது, வன்முறை அல்லது பிறரை அச்சுறுத்தும் வகையில் பதிவுகளை இடுவது மற்றும் பிற பயனர்களை இலக்கு வைத்து துன்புறுத்துவதில் ஈடுபடுவது ஆகியவை அடங்கும்.
ட்விட்டர் நிறுவனம் பயனர்களின் கணக்குகளை சஸ்பெண்ட் செய்வதஹ்ரக்கு பதிலாக அதன் கொள்கைகளை மீறும் பதிவுகளை கட்டுப்படுத்துவது அல்லது பயனர்கள் அவர்களது கணக்குகளை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு முன்பு ட்வீட்களை அகற்றும்படி கேட்பது போன்ற குறைவான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது.