காப்புரிமை மீறிய கூகுள்.? 32.5 மில்லியன் டாலர் இழப்பீடு அளிக்க உத்தரவிட்ட அமெரிக்க நீதிமன்றம்.!
காப்புரிமை விதியினை மீறியதற்காக கூகுள் நிறுவனம், சோனாக் நிறுவனத்திற்கு 32.5 மில்லியன் டாலர் இழப்பீடு அளிக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
கூகுள் நிறுவனமானது, தங்கள் நிறுவன ஸ்பீக்கர்காலை Sonos எனும் நிறுவனம் மூலம் தயாரித்து வந்தது. திடீரென sonos நிறுவனம் கடந்த 2020ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் மீது காப்புரிமை மீறல் வழக்கு பதிவு செய்தது.
அதாவது, தங்கள் இரு நிறுவன ஒப்பந்தத்தை மீறி காப்புரிமையை பயன்படுத்தியதாக கூறி குற்றம் சுமத்தியது. இந்த வழக்கு சான் பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் அண்மையில் நீதிபதி குறிப்பிடுகையில், கூகுள் நிறுவனமானது நிறுவன ஒப்பந்தத்தை மீறியதற்காக 32.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை இழப்பீடாக Sonos நிறுவனத்திற்கு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.