St.David’s Day: செயின்ட் டேவிட் தினத்தை முன்னிட்டு டிராகன் கொண்ட சிறப்பு டூடல்.!
Google Doodle: செயின்ட் டேவிட் தினத்தை முன்னிட்டு, அந்நாளை கௌரவிக்கும் வகையில், புகழ்பெற்ற சிவப்பு டிராகன் கொண்ட சிறப்பு டூடுலை கூகுள் வெளிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1ம் தேதி, உலக முழுவதும் உள்ள வெல்ஷ் வம்சாவளியை சார்ந்தவர்கள், இந்நாளை கொண்டாடுகிறார்கள்.
READ MORE – Leap year 2024: ‘லீப்’ தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்.!
வேல்ஸ் என்பது ஐக்கிய இராச்சியத்தின் உள்ள ஒரு நாடாகும். பல நூற்றாண்டாக, மார்ச் 1 தேசிய விழாவாக கொண்டாடபட்டு வருகிறது. அதாவது, 12 ஆம் நூற்றாண்டில் போப் கலிஸ்டஸ், டேவிட் புனிதராக அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்த விழா வழக்கமாக கொண்டாடப்படுகிறது. வேல்ஸ் நாட்டின் புரவலர் புனிதர் 589-ல் புனித டேவிட் இறந்த தேதி தான் மார்ச் 1 அன்று வருகிறது.
READ MORE – Paytm : வங்கியுடனான ஒப்பந்தங்களை நிறுத்துகிறது பேடிஎம் ..! அடுத்தகட்ட திட்டம் இதுதானா ..?
அதன்படி, வேல்ஸின் புரவலர் துறவியான செயின்ட் டேவிட்க்கு மரியாதை செலுத்தும் வகையில், தங்கள் கலாச்சார அடையாளத்தை கொண்டாடுகிறார்கள். இந்நாளில், வேல்ஸின் தேசிய சின்னங்களான லீக் அல்லது டாஃபோடில் அணிந்து பலர் தங்கள் வெல்ஷ் பெருமையை வெளிப்படுத்துகிறார்கள்.
READ MORE – யாரெல்லாம் இந்த ஸ்மார்ட்போன்களுக்கு வெயிட்டிங்? இம்மாதம் வெளியாகும் டாப் 4 லிஸ்ட்!
இந்நிலையில், கூகுள் டூடுல் இன்று செயின்ட் டேவிட் தினத்தை கொண்டாடியது. இந்த நாளை சிறப்பாகும் வகையில், சிவப்பு நிறம் கொண்ட டிராகன் மற்றும் பூக்கள் கொண்ட சிறப்பு டூடுலை வெளிட்டுள்ளது. மேலும் தனது செய்தி குறிப்பில், மகிழ்ச்சியான செயின்ட், வெல்ஷ் வம்சாவளி அனைவருக்கும் டேவிட் தினம் என்றும் செயின்ட் டேவிட் தின வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளது.