உருவத்தை மாற்றும் நிஜ வாழ்க்கை ‘டெர்மினேட்டர்’..! விஞ்ஞானிகளின் வியப்பூட்டும் கண்டுபிடிப்பு..!
தனது உருவத்தை மாற்றும் மனித உருவம் கொண்ட சிறிய ரோபோவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
விஞ்ஞானிகள் மனித உருவம் கொண்ட சிறிய ரோபோவை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோ தனது உருவத்தை திரவமாக மாற்றக்கூடிய தன்மை கொண்டது. இந்த ரோபோ பல்வேறு சூழ்நிலைகளில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாட்டை சோதனை செய்ய ஒரு சிறிய சிறைச்சாலையில் பூட்டிவைத்து திரவமாக மாறி தானாக வெளியே வருமாறு செய்தனர்.
முந்தைய காலங்களில் ரோபோக்களை பள்ளங்களை தாண்ட வைத்தும், சுவர்களில் ஏற வைத்தும் அவற்றின் செயல்பாடுகளை கண்டறிந்தனர். அந்த வகை ரோபோக்கள் காந்த தன்மையுடனும் மின்சாரத்தை கடத்தும் தன்மையுடனும் இருந்தது. இப்பொழுது விஞ்ஞானிகள் ரோபோக்களை சோதனை செய்வதற்கான பல்வேறு வழிகளைக் கண்டறிந்துள்ளனர்.
இந்த ரோபோவை உருவாக்கிய ஆய்வில் ஹாங்காங்கின் சீனப் பல்கலைக்கழகத்தின் பொறியாளர் செங்ஃபெங் பான் தலைமை தாங்கியுள்ளார். தற்பொழுது சில குறிப்பிட்ட மருத்துவ மற்றும் பொறியியல் சிக்கல்களைத் தீர்க்க, இந்த ரோபோ அமைப்பை நடைமுறை வழிகளில் கொண்டு வருகிறோம் என்று பான் கூறியுள்ளார்.