மற்றமொழி ட்வீட்களை, மொழிபெயர்க்கும் புதிய அம்சம் இனி ட்விட்டரில்-மஸ்க்.!
ட்விட்டர் இனி வெளிநாட்டு மொழி ட்வீட்களை, மொழிபெயர்க்கவும் மற்றும் பரிந்துரைக்கவும் இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் இனி வரும் மாதங்களில் ஆங்கிலம் தவிர்த்து மற்ற மொழிகளில் உள்ள ட்வீட்களை மொழிபெயர்க்கவுள்ளதாக ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) எலான் மஸ்க் கூறியுள்ளார். இது குறித்து மஸ்க் கூறியதாவது, ட்விட்டர் வரும் மாதங்களில் மற்ற நாடுகள் மற்றும் கலாச்சாரங்களில் உள்ளவர்களிடமிருந்து “அற்புதமான” ட்வீட்களை மொழிபெயர்த்து, பரிந்துரைக்கும் என்று அறிவித்தார்.
ஒவ்வொரு நாளும் மற்ற நாடுகளில் குறிப்பாக ஜப்பான் போன்ற நாடுகளின் காவியமான ட்வீட்கள் வருகின்றன, அவற்றை இனி ட்விட்டர் மொழிபெயர்த்து, பயனர்களுக்கு பரிந்துரைக்கும் என்று அவர் மேலும் கூறினார்.