WhatsApp: பிரபல சமூக ஊடக செயலியான வாட்ஸ் அப், தங்களது பயனர்களுக்கு புதிய அம்சங்களை தொடர்ந்து அப்டேட்டுகள் மூலம் வழங்கி வருகிறது. அந்தவகையில் சமீபத்தில், வாட்ஸ்அப் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு பயனர்கள், ப்ரொஃபைல் பிக்ச்சரை ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாத வகையில் ஒரு அம்சத்தை வெளியிட்டிருந்தது.
ஆனால், profile view mode-வை ஸ்கிரீன்ஷாட் எடுக்கலாம் என்றும் தனியுரிமை பாதுகாப்பு காரணமாக இதுபோன்ற அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு வாட்ஸ்அப்பில் புதிய (chat search feature) அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் தங்களது உரையாடல்களை தேதி வாரியாக பார்க்க வழிவகுத்தது.
அதேசமயம், இன்ஸ்டாகிராம் போல, வாட்ஸ் அப் ஸ்டேட்டஸிலும் விருப்பமானவரை மென்ஷன் செய்யும் அம்சம் விரைவில் அறிமுகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்று பல்வேறு அம்சங்கள் வாட்ஸ் அப்பில் வந்த வண்ணம் உள்ள நிலையில், அந்த வரிசையில் தற்போது, வாட்ஸ் அப்பில் வாய்ஸ் உரையாடலை டெக்ஸ்டாக மாற்றும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
அதன்படி, வாட்ஸ்அப்பில் வாய்ஸ் உரையாடலை டெக்ஸ்டாக மாற்றும் அம்சம் தற்போது சோதனையில் இருந்து வருவதாகவும், முதலில் iOS பயனர்களுக்கு, பின்னர் Android பயனர்களுக்கும் பீட்டா வெர்சனாக கொண்டுவந்து சோதனை நடைபெற்று வருவதாக வாட்ஸ் அப் நிறுவனம் கூறியுள்ளது. எனவே இந்த புதிய அம்சம் விரைவில், அனைத்து பயனர்களுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
இந்த அம்சம் பயனர்களுக்கு குரல் செய்திகளை டெக்ஸ்ட் வடிவில் தெரிந்துகொள்ள உதவுகிறது. இது பயனர்களுக்கு மாற்று தகவல்தொடர்பு வழியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், தொடர்பு மற்றும் பிற வசதியை மேம்படுத்த இந்த அம்சம் வழிவகுக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…