வாட்ஸ் அப்பில் வாய்ஸ் நோட்ஸ் பிடிக்கலையா? இதோ உங்களுக்காக புதிய அம்சம்!

whatsapp

WhatsApp: பிரபல சமூக ஊடக செயலியான வாட்ஸ் அப், தங்களது பயனர்களுக்கு புதிய அம்சங்களை தொடர்ந்து அப்டேட்டுகள் மூலம் வழங்கி வருகிறது. அந்தவகையில் சமீபத்தில், வாட்ஸ்அப் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு பயனர்கள், ப்ரொஃபைல் பிக்ச்சரை ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாத வகையில் ஒரு அம்சத்தை வெளியிட்டிருந்தது.

Read More – ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஆப்பு… இனி வாட்ஸ்அப்பில் இதனை செய்ய முடியாது!

ஆனால், profile view mode-வை ஸ்கிரீன்ஷாட் எடுக்கலாம் என்றும் தனியுரிமை பாதுகாப்பு காரணமாக இதுபோன்ற அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு வாட்ஸ்அப்பில் புதிய (chat search feature) அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் தங்களது உரையாடல்களை தேதி வாரியாக பார்க்க வழிவகுத்தது.

Read More – புது புது அப்டேட்டுகளை அள்ளி வீசும் வாட்ஸ் அப்… விரைவில் வெளியாகும் புதிய அம்சம்!

அதேசமயம், இன்ஸ்டாகிராம் போல, வாட்ஸ் அப் ஸ்டேட்டஸிலும் விருப்பமானவரை மென்ஷன் செய்யும் அம்சம் விரைவில் அறிமுகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்று பல்வேறு அம்சங்கள் வாட்ஸ் அப்பில் வந்த வண்ணம் உள்ள நிலையில், அந்த வரிசையில் தற்போது, வாட்ஸ் அப்பில் வாய்ஸ் உரையாடலை டெக்ஸ்டாக மாற்றும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அதன்படி, வாட்ஸ்அப்பில் வாய்ஸ் உரையாடலை டெக்ஸ்டாக மாற்றும் அம்சம் தற்போது சோதனையில் இருந்து வருவதாகவும், முதலில் iOS  பயனர்களுக்கு, பின்னர் Android பயனர்களுக்கும் பீட்டா வெர்சனாக கொண்டுவந்து சோதனை நடைபெற்று வருவதாக வாட்ஸ் அப் நிறுவனம் கூறியுள்ளது. எனவே இந்த புதிய அம்சம் விரைவில், அனைத்து பயனர்களுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

Read More – மனித மூளைக்குள் நியூராலிங்க் சிப்.! மனதில் நினைத்தை அப்படியே செய்யும் கணினி.!

இந்த அம்சம் பயனர்களுக்கு குரல் செய்திகளை டெக்ஸ்ட் வடிவில் தெரிந்துகொள்ள உதவுகிறது. இது பயனர்களுக்கு மாற்று தகவல்தொடர்பு வழியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், தொடர்பு மற்றும் பிற வசதியை மேம்படுத்த இந்த அம்சம் வழிவகுக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay
Heart Donation
gold price
KL Rahul - Virat Kohli
TikTok Ban in USA
Coimbatore Tidel Park