நியூயார்க்கில் உள்ள ஆப்பிள் ஸ்டோரில் 300 ஐபோன்களை வாங்கிய நபரிடம் சில நிமிடங்களில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க் நகரில் உள்ள பிரபலமான ஆப்பிள் ஸ்டோரில் 27 வயது நபர் தனது கடைக்கு வழக்கமாக மொபைல் மற்றும் மற்ற உதிரிபாகங்கள் வாங்குவார். அந்தவகையில் கடந்த திங்கள்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் 300 ஐபோன்களை வாங்கியுள்ளார்.
அதன் பின்னர் மூன்று பைகள் நிறைய ஸ்மார்ட்போன்களுடன் காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, ஒரு கார் அவருக்கு அருகில் நின்றது.அந்த காரிலிருந்து இரண்டு பேர் வெளியே வந்து, வலுக்கட்டாயமாக பைகளை கேட்டுள்ளனர்.
அவர் பையை தர மறுத்ததால், கொள்ளை கும்பலில் ஒருவர் அவரது முகத்தில் குத்திவிட்டு மூன்று பைகளில் ஒன்றை எடுத்துக்கொண்டு ஓடியுள்ளார் .அந்த பையில் கிட்டத்தட்ட 125 ஐபோன்கள் இருந்துள்ளது.ஐபோன்களை திருடிய நபர்களை போலீசார் தேடிவருவதுடன், சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் நேரில் வருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…