AI தொழில்நுட்பத்தின் அட்டகாசமான பரிமாணம்.! Sora நிகழ்த்தும் அதிசய காட்சிகள்… 

Open AI Sora

தகவல் தொழில்நுட்ப உலகில் தற்போது படுவேகமாக வளர்ந்து வரும் துறையாக உள்ளது செயற்கை நுண்ணறிவு தளமான AI (Artificial Intelligence). இந்த AI தொழில்நுட்ப உலகில் அடுத்தடுத்த புதுபுது அப்டேட்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

AI தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் OpenAI நிறுவனம் தற்போது ChatGPT தளத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. புதியதாக Sora எனும் தளத்தை உருவாக்கியுள்ளது. இந்த Sora தளமானது பயனர்கள் கேட்கும் தரவுகளை வைத்துக்கொண்டு அதன் அடிப்படையில் வீடியோ தயார் செய்து கொடுக்கிறது.

சாம்சங் பட்ஸில் Galaxy AI அம்சங்கள்.. ஆனா இது கட்டாயம்!

இது குறித்து அதன் தலைமை அதிகாரி சாம் ஆல்ட்மேன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில்,பயனர்கள் வழங்கும் புகைப்படங்கள், பயனர்கள் தரும் குறிப்புகள், ஒப்பீட்டுக்காக அனுப்பும் காட்சிகளைப் பயன்படுத்தி அதற்கேற்ற வீடியோக்களை Sora உருவாக்கும் திறன் கொண்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.

மேலும் இது பற்றி கூறுகையில், நிஜ உலகில், அனைத்து வித உயிரின உணர்வுகள், அதன் உடல் அசைவுகள், உயிரற்ற அசைவுகள் (மரம், கடல் போன்றவை) என அனைத்தின் அசைவுகளையும் AIக்கு நாங்கள் கற்பித்து உள்ளோம். மேலும் கற்பித்து வருகிறோம் என்றும் பதிவிட்டுள்ளனர்.

சோரா என்று அழைக்கப்படும் இந்த AI மாதிரியானது, பயனர்களின் வெறும் சில தரவுகளை (செய்தி வடிவிலான கட்டளைகள்) மட்டுமே வைத்து கொண்டு ஒரு நிமிட வீடியோவை முழுவதுமாக உருவாக்க முடியும். ஜப்பானிய மொழியில் Sora என்பது “வானம்” என்று பொருள்படும். Sora தலைமை அதிகாரி சாம் ஆல்ட்மேன் தனது சமூக வலைதள பக்கத்தில் பயனர்கள் தரும் தரவுகள் அடிப்படையில் புது புது நம்பமுடியாத விடீயோக்களை பதிவிட்டு வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்