இன்பினிக்ஸின் இன்புக் எக்ஸ்2 (INBook X2) ஸ்லிம் லேப்டாப் ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளது.
ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனமான இன்பினிக்ஸ் (Infinix) அதன் மலிவு விலை இன்புக் எக்ஸ்2 (INBook X2) ஸ்லிம் லேப்டாப்பை இந்தியாவில் கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது. மாணவர்கள் மற்றும் தொழில் நிபுணர்களை இலக்காகக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த லேப்டாப்பை, இன்று முதல் பிளிப்கார்ட் இணையதளம் மூலம் ஆன்லைனில் வாங்கலாம்.
இந்த இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்2 (Infinix INBook X2) ஸ்லிம் லேப்டாப்பின் விற்பனை, மதியம் 12 மணி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது ரூ.26,990 என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. அதன்படி, இன்று விற்பனைக்கு வந்துள்ள இந்த இன்ஃபனிக்ஸ் இன்புக் எக்ஸ்2 ஸ்லிம் லேப்டாப்பின் அம்சங்களை கீழே காணலாம்.
இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்2 ஸ்லிம் லேப்டாப் 1080×1920 பிக்சல் தெளிவுடன் 14 இன்ச் FHD டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மேலும், இது 300 நீட்ஸ் வரை பிரைட்னஸ் மற்றும் 100% ஆர்ஜிபி (RGB) நிறங்களை வெளிப்படுத்தும் தன்மையை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் நாம் பார்க்கும் வீடியோவின் நிறம் ஒழுங்குபடுத்தப்பட்டு தெளிவாக காட்டப்படும்.
குறைந்தபட்சம் 1.24 கிலோ எடை கொண்ட இந்த லேப்டாப் 50 வாட் பேட்டரி மற்றும் 65 வாட் சி-டைப் (C-Type) பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டுள்ளது. இதனால் பயனர்கள் அதிக நேரம் இந்த லேப்டாப்பில் வீடியோ மற்றும் இணையதள சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் வீடியோ கால் செய்வதற்கு HD வெப்கேம்மும் உள்ளது.
இந்த இன்புக் எக்ஸ்2 லேப்டாப், 11th ஜென் இன்டெல் கோர் ஐ7 (11th generation Intel Core) பிராசஸர் மூலம் இயங்கக்கூடிய இந்த லேப்டாப் விண்டோஸ் 11 உடன் விற்பனைக்கு வருகிறது. சிவப்பு, பச்சை மற்றும் நீல நிறங்களில் வரும் இன்புக் எக்ஸ்2, அதன் அம்சங்களுக்கு ஏற்ப விலையில் மாறுபாடு கொண்டுள்ளது.
அதன்படி, இன்புக் எக்ஸ்2 விலை கீழே கொடுக்கப்பட்டுள்ளது,
i3 உடன் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் : ரூ.29,990
i3 உடன் 8 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் : ரூ 31,990
i5 உடன் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் : ரூ.38,990
i5 உடன் 16 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் : ரூ 40,990
i7 உடன் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் : ரூ 48,990
i7 உடன் 16 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் : ரூ 50,990
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…