Vivo Y200 5G: ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான விவோ நிறுவனம் பட்ஜெட் விலையில் மிட்ரேஞ்ச் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த கடந்த பிப்ரவரி 16ம் தேதி விவோ ஒய்100 (Vivo Y100) ஸ்மார்ட்போனை ரூ,21,999 என்ற விலையில் அறிமுகம் செய்தது.
அதைத்தொடர்ந்து, இந்த மாதம் விவோ ஒய்200 5ஜி (Vivo Y200 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதாக, கடந்த அக்-9ம் தேதி டீசர் ஒன்றை வெளியிட்டு தெரியப்படுத்தியது. இதையடுத்து, போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அக்டோபர் 23ம் தேதி விவோ Y200 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்தது.
அதன்படி, இந்த போன் வரும் அக்டோபர் 23ம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கு மத்தியில் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கக்கூடிய டிஸ்ப்ளே, கேமரா, பிராசஸர் போன்றவற்றின் விவரங்கள் குறித்த தகவல்கள் சமூக ஊடகங்களில் கசிந்தது. தற்போது அதன் விலையும் வெளியாகி உள்ளது.
டிஸ்பிளே
விவோ ஒய்200 ஸ்மார்ட்போன் 2,400 x 1,080 பிக்சல்கள் ரெசல்யூஷன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய 6.67 இன்ச் எஃப்எச்டி+ (FHD+) அமோலெட் (Amoled) டிஸ்பிளேவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக அறிமுகமான விவோ Y100 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் அளவுடைய டிஸ்பிளே உள்ளது.
பிராசஸர்
விவோ ஒய்200 ஸ்மார்ட்போனில் அட்ரினோ 619 (Adreno 619) ஜிபியு உடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 (Qualcomm Snapdragon 4 Gen 1) சிப்செட் பொருத்தபடலாம். இதே பிராசஸர் ரெட்மி நோட் 12 5ஜி (Redmi Note 12 5G) மற்றும் ஐக்யூ இசட் 6 லைட் 5ஜி (IQoo Z 6 Lite 5G) ஸ்மார்ட்போனிலும் உள்ளது.
இது ஆண்ட்ராய்டு 13-ஐ அடிப்படையாகக் கொண்ட ஃபன்டச் ஓஎஸ் 13 (FunTouch OS 13) மூலம் இயக்கப்படுகிறது. இந்த மொபைல் ஒரு 5ஜி மொபைல் ஆகும். இதற்கு முந்தைய மாடலான விவோ ஒய்100 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 900 சிப்செட் உள்ளது.
கேமரா
இதில் பின்புறத்தில் ஆரா லைட்டுடன் கூடிய ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) அம்சம் கொண்ட 64 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் கேமரா கொண்ட டபுள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இந்த அம்சம் ஏற்கனவே விவோ வி29 (Vivo V29) மற்றும் விவோ வி29 ப்ரோ (Vivo V29 Pro) மாடல்களில் கொண்டு வரப்பட்டுள்ளது.
செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்காக 16 எம்பி கேமரா பொருத்தப்படலாம். இதில் டிஜிட்டல் ஜூம், ஆட்டோ ஃப்ளாஷ், ஃபேஸ் ஃபேஸ்டெக்ஷன் போன்ற புகைப்பட அம்சங்கள் இருக்கலாம்.
பேட்டரி மற்றும் ஸ்டோரேஜ்
190 கிராம் எடை மற்றும் 7.69 மிமீ தடிமன் கொண்ட இந்த போனில் 4800 mAh திறன் கொண்ட லித்தியம்-அயன் பேட்டரி பொருத்தப்படலாம். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய யுஎஸ்பி டைப்-சி போர்ட்டுடன் கூடிய 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதன் ஆரம்ப மாடல் ஆனது 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜுடன் வரலாம்.
விலை
விவோ ஒய்200 டெசர்ட் கோல்ட் மற்றும் ஜங்கிள் கிரீன் நிறங்களில் 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜுடன் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. விவோ ஒய் 100 ஆனது ரூ.21,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, விவோ ஒய் 200 ஸ்மார்ட்போனும் ரூ.24,000 என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் தற்போது, ரூ.21,999 என்ற விலையிலேயே அறிமுகம் ஆகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிடத்தக்க பேங்க் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் ரூ.2,500 வரை தள்ளுபடி வழங்கப்படும். மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ, போகோ எஃப்5 மற்றும் இன்பினிக்ஸ் ஜீரோ 30 5ஜி போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக விவோ ஒய்200 ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…