8ஜிபி ரேம்..50 எம்பி கேமரா..5,000mAh பேட்டரி.! பட்ஜெட் விலையில் ஒப்போவின் புதிய மாடல்.?

Oppo A79 5G

Oppo A79 5G: ஒப்போ நிறுவனம் இந்த மாதத்தில் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதில் சில ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டை அறிவித்தும், சில ஸ்மார்ட்போன்களை எந்தவித அறிவிப்பும் இல்லாமல் அமைதியாக அறிமுகம் செய்து  வருகிறது.

அந்த வகையில், கடந்த அக்டோபர் 17ம் தேதி ஒப்போ ஏ18 (OPPO A18) போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, தற்போது அதே ஏ-சீரிஸில் ஒப்போ ஏ79 (Oppo A79 5G) என்கிற 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

டிஸ்பிளே

ஒப்போ ஏ79 5ஜி ஸ்மார்ட்போனில் 2400 x 1080 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட 6.72 இன்ச் (17.06 செ.மீ) அளவுள்ள எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளே 16.7 மில்லியன் வண்ணங்களை ஒன்றாக ஒருங்கிணைத்து காட்டக்கூடியது.

அதோடு 60 முதல் 90 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180 ஹெர்ட்ஸ் டச் சம்ப்ளிங் ரேட்டும் உள்ளதால், மல்டி டாஸ்கிங் மற்றும் கேம் விளையாடும் போது ஸ்மூத்தாக இருக்கும். சூரிய ஒளியில் தெளிவாக பார்ப்பதற்கு 680 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டுள்ளது. இதில் பாண்டா கவர் கிளாஸ் உள்ளது.

பிராசஸர்

எட்டு கோர்களைக் கொண்ட மாலி ஜி57 எம்சி2 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் ஹீலியோ 6833 சிப்செட் ஒப்போ ஏ79 5ஜி ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ளது. அதோடு ஆண்ட்ராய்டு 13-ஐ அடிப்படையாகக் கொண்டு செயல்படும் கலர் ஓஎஸ் 13.1 உள்ளது. நீர் மாற்றும் தூசியில் இருந்து பாதுகாக்க ஐபிX4 ரேட்டிங் உள்ளது.

இது 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக், பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், புளூடூத் 5.3, ஜிபிஎஸ் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார், அம்பியன்ட் லைட் சென்சார், கைரோஸ்கோப், ஜியோமேக்னடிக் சென்சார், கிராவிட்டி சென்சார் போன்ற சென்சார்களும் உள்ளன.

கேமரா

ஒப்போ ஏ79 5ஜியில் டபுள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதன்படி ஆட்டோ ஃபோகஷுடன் கூடிய 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி கேமரா அடங்கும். முன்புறம் செல்ஃபிக்காக 8 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதில் நைட் மோட், ப்ரோ, பனோ, போர்ட்ரெய்ட், டைம்-லாப்ஸ், ஸ்லோ-மோஷன், டெக்ஸ்ட் ஸ்கேனர், எக்ஸ்ட்ரா எச்டி, ஸ்டிக்கர் மற்றும் கூகுள் லென்ஸ் போன்ற கேமரா அம்சங்களும் உள்ளன.

பேட்டரி

193 கிராம் எடை கொண்ட ஒப்போ ஏ79 5ஜியில் 5,000 mAh திறன் கொண்ட லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதன்மூலம் 30 நிமிடங்களில் பேட்டரியை பூஜ்ஜியத்திலிருந்து 51% வரை சார்ஜ் ஆகிவிடும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 26 மணிநேரம் கால் பேச மற்றும் 14 மணிநேர வீடியோ பிளேபேக்கையும் வழங்கும் என்று கூறப்படுகிறது.

ஸ்டோரேஜ் மற்றும் விலை

க்ளோயிங் கிரீன் மற்றும் மிஸ்டரி பிளாக் என இரண்டு வண்ணங்களில் அறிமுகமாகியுள்ள ஒப்போ ஏ79 5ஜி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டில் விற்பனைக்கு உள்ளது. இந்த வேரியண்ட்டின் ஆரம்ப விலையானது ரூ.19,999 ஆகும். தற்போது ஒப்போ ஸ்டோரில் இந்த ஸ்மார்ட்போனின் ப்ரீ-ஆர்டர் தொடங்கியுள்ளது. ஒப்போ ஏ79 5ஜியின் விற்பனை நாளை முதல் (அக்டோபர் 28ம் தேதி) தொடங்கும்.

இந்த ஸ்மார்ட்போனை எஸ்பிஐ, பேங்க் ஆஃப் பரோடா போன்ற குறிப்பிட்ட வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி, வாங்கினால் 10 % அதாவது ரூ.2,000 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படும். அதோடு 12 மாதங்களுக்கான நோ காஸ்ட் இஎம்ஐ வசதியும் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்