8,000 ரூபாய்க்கு களமிறங்கும் கூல்பேட் எம்3! அதன் சிறப்பம்சங்கள்!!
ரெம்ப நாள்களுக்கு பிறகு தனது புதிய மாடலை களமிறக்கி உள்ளது கூல்பேட் நிறுவனம். இந்த புதிய கூல்பேட் எம்3 யானது, ஆப்பிள் ஐ-போனில் இருக்கும் நாட்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் அறிமுகமாகியுள்ளது.
மேலும் இந்த மாடல் ஆண்டிராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்துடன் செயல்படும்.இந்த மாடல் தற்போது சீனாவில் லன்ச் ஆகி உள்ளது. விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் டிஸ்பிளே 5.85-இன்ச் எச்டி எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1512 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. கூல்பேட் எம்3 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 1.8ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் எம்டி6750 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மகிவும் அருமையாக இருக்கும்.
இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமியும் இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு கைரேகை சென்சார் போன்ற பல ஆதரவுகளும் உள்ளது. இந்திய ருபாய் மதிப்பில் இதன் விலை 8,100ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
DINASUVADU