ரூ.14,999 பட்ஜெட்டில்..6ஜிபி ரேம், 5000mAh பேட்டரி.! வந்தது சாம்சங்கின் புதிய மாடல்.!
Samsung Galaxy A05s: சாம்சங் நிறுவனம் அதன் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் (Samsung Galaxy A05s) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. சாம்சங்கின் புதிய கேலக்ஸி ஏ05 (Galaxy A05) மற்றும் கேலக்ஸி ஏ05எஸ் (Galaxy A05s) என்ற ஸ்மார்ட்போன்கள் மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தற்போது, சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.
டிஸ்ப்ளே
கேலக்ஸி ஏ05எஸ் ஆனது வாட்டர் டிராப் நாட்ச் உடன் 1080 x 2400 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட 6.7 இன்ச் (17.08 செமீ) அளவுள்ள எஃப்எச்டி+ பிஎல்எஸ் எல்சிடி (FHD+ PLS LCD) டிஸ்பிளே உள்ளது. இந்த டிஸ்பிளே 60 ஹெர்ட்ஸ் முதல் 90 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்டைக் (Refresh rate) கொண்டுள்ளது. 16 மில்லியன் நிறங்களை ஒன்றாக இணைத்து உங்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கும். இதில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார் (fingerprint sensor), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் உள்ளது.
பிராசஸர்
இந்த ஸ்மார்ட்போனில் அட்ரினோ 610 (Adreno 610) ஜிபியு உடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 (Qualcomm Snapdragon 680) சிப்செட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஒரு 4ஜி பிராசஸர் ஆகும். இதில் ஓரளவு நல்ல கிராஃபிக்ஸ் கொண்ட கேம்களை விளையாடலாம். அதோடு ஆப்ஸ்களை பயன்படுத்தும்போது ஸ்மூத்தாக இருக்கும். இதில் ஆன்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையிலான ஒன் யூஐ 5.1 (One UI 5.1) உள்ளது.
கேமரா:
இந்த போனின் பின்பிறத்தில் எல்இடி ஃபிளாஷுடன் கூடிய டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இதில் 10x வரை டிஜிட்டல் ஜூம் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா, 2 எம்பி டெப்த் (depth) கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ (Macro) கேமரா ஆகியவை அடங்கும். முன்புறம் 13 எம்பி செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதில் புளூடூத் 5.1, ஆக்சிலரோமீட்டர், லைட் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார் போன்றவை உள்ளன.
பேட்டரி
194 கிராம் எடை கொண்ட கேலக்ஸி ஏ05எஸ் ஸ்மார்ட்போனில் 5000 mAh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதால் அதிக நேரம் பயன்படுத்த முடியும். இதனை வேகமாக சார்ஜ் செய்ய யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) போர்ட்டுடன் கூடிய 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
ஸ்டோரேஜ் மற்றும் விலை
பிளாக், லைட் வயலட் (Light Violet) மற்றும் லைட் கிரீன் (Light Green) என மூன்று வண்ணங்களில் அறிமுகமாகியுள்ள இந்த போன், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜுடன் விறபனையாகிறது. இந்த ஸ்டோரேஜை மெமரி கார்டு மூலம் 1 டிபி வரை உயர்த்திக்கொள்ளலாம். இந்த புதிய மாடல் ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,999 என சாம்சங் நிறுவனம் நிர்ணயித்துள்ளது.
இதற்கு 2 ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்களும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாங்கும்போது ரூ.1,000 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படும். மாதம் ரூ.1,555.50 லிருந்து நோ காஸ்ட் இஎம்ஐ (No Cost EMI) ஆனது தொடங்குகிறது.