64 எம்பி கேமரா..5000mAh பேட்டரி.! சீனாவில் அறிமுகமாகும் விவோ ஒய்100 5ஜி..எப்போ தெரியுமா.?
விவோ நிறுவனம் அதன் ஒய் சீரிஸில் விவோ ஒய்100 5ஜி ஸ்மார்ட்போனை அக்டோபர் 27ம் தேதி அதாவது நாளை சீனாவில் வெளியிட உள்ளது. இதே விவோ ஒய் 100 5ஜி (Vivo Y100 5G) போனை கடந்த பிப்ரவரி 16ம் தேதி விவோ நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.
இப்போது இதே மாடலை சீனாவிலும் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த மாடல் ஸ்மார்ட்போன் இந்தியாவில் உள்ள ஒய் 100 5ஜி ஸ்மார்ட்போனை விட வித்தியாசமான வடிவமைப்பு, சிப்செட் மற்றும் பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளதாக இருக்கும்.
தற்போது விவோ ஒய்100 5ஜி போனின் அறிமுகத்திற்காக காத்துக்கொண்டிருக்கும் நிலையில், ஸ்மார்ட்போனின் முழு விவரக்குறிப்புகள் மற்றும் விலை ஆகியவை இப்போது சீனா டெலிகாம் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது.
டிஸ்பிளே
தற்போதுள்ள தகவலின்படி, வரவிருக்கும் விவோ ஒய்100 5ஜி ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் அளவுள்ள எஃப்எச்டி+ தெளிவுடன் கூடிய அமோலெட் டிஸ்பிளே இடம்பெறலாம். இது இந்தியாவில் இருக்கும் விவோ ஒய்100 போனை விட 0.4 இன்ச் அதிகமாகும்.
அதன்படி, இந்திய மாடலில் 2400 × 1080 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட 6.38 இன்ச் அளவுள்ள அமோலெட் டிஸ்பிளே உள்ளது. இதில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், அக்சிலரோமீட்டர், பிராக்ஸிமிட்டி சென்சார், கைரோஸ்கோப், அம்பியன்ட் லைட் சென்சார், எலக்ட்ரானிக் காம்பஸ் போன்ற சென்சார்கள் உள்ளன.
பிராசஸர்
இந்த புதிய விவோ போனில் அட்ரினோ 612 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட குவால்காமின் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 எஸ்ஓசி என்கிற ஒரு 5ஜி பிராசஸர் பொருத்தப்படலாம். இது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு ஃபன்டச் ஓஎஸ் 13 மூலம் இயக்கப்படுகிறது. இந்திய மாடலில் மாலி ஜி68 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் டைமன்சிட்டி 900 பிராசஸர் உள்ளது.
கேமரா
விவோ ஒய்100 5ஜி ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கலாம். இந்த அமைப்பில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) அம்சம் கொண்ட 64 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் கேமரா அடங்கும்.
முன் பக்கத்தில் செல்ஃபிக்காக 8 எம்பி கேமரா பொருத்தப்படலாம். இதில் லைவ் ஃபோட்டோ, டைம் லேப்ஸ், ப்ரோ, பானோ, போர்ட்ரெய்ட், ஸ்லோ மோஷன், வீடியோ, விளாக் மூவி, டூயல் வியூ, டபுள் எக்ஸ்போஷர் போன்ற கேமரா அம்சங்களும் வரலாம்.
பேட்டரி மற்றும் ஸ்டோரேஜ்
183 கிராம் எடையுள்ள இந்த ஸ்மார்ட்போனில் 5000 mAh திறன் கொண்ட லித்தியம்-அயன் பேட்டரி பொருத்தப்படலாம். சார்ஜிங் வசதி குறித்த தகவல் வெளியாகவில்லை. ஸ்டார்ரி நைட் பிளாக், கிளாஸ் லைட் ப்ளூ மற்றும் கிளாஸ்டு கிளவுட் கிரீன் ஆகிய வண்ணங்களில் வெளியாகவுள்ள இந்த ஸ்மார்ட்போன் 4 வேரியண்ட்களில் அறிமுகமாகலாம்.
விலை
அதன்படி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் CNY 1599 (ரூ.18,188) என்ற விலையிலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் CNY 1799 (ரூ.20,602) என்ற விலையிலும், 12 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் CNY 1999 (ரூ.22,735) என்ற விலையிலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் CNY 2199 (ரூ.25,010) என்ற விலையிலும் விற்பனையாகலாம்.