சீன ஸ்மார்ட்போன் மற்றும் டெலிகாம் கியர் தயாரிப்பாளரான ஹூவாய், 2019 ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் அதன் முதல் 5ஜி ஸ்மார்ட்போனை தொடங்குவதாக அறிவித்துள்ளது.
அந்த 5ஜி ஸ்மார்ட்போனில் ஹூவாய் நிறுவனத்தின் சொந்த 5ஜி மோடம் இடம்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்ஸேனில் நடந்த நிறுவனத்தின் 2019 ஆம் ஆண்டிற்கான தனது திட்டங்களை நிறுவனம் வெளிப்படுத்தும் ஹூவாய் உலகளாவிய ஆய்வாளர் உச்சிமாநாடு 2018-ல் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஹூவாய் நிறுவனத்தின் ஹூவாய் மேட் 20 ஆனது 2018 ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டில் வெளியாகும் என்கிற நிலைப்பாடு உள்ளதால், கூறப்படும் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஹூவாய் மேட் 30 ஆக இருக்கவும், அதுவொரு 5ஜி மோடம் கொண்டிருக்கவும் அதிக வாய்ப்புள்ளது.
மறுகையில் அறிவிக்கப்பட்ட Balong 5G01 சிப் ஆனது ஸ்மார்ட்போன்களுக்குப் பொருந்தாது, அதற்கு பதிலாக, ஹூவாய் தனது சொந்த வாகனம் மற்றும் பிற ஐஓடி தயாரிப்புகளில் அதை பயன்படுத்தும். ஹூவாய் நிறுவனத்தின் படி, வருகிற 2025-க்குள் 1.1 பில்லியன் 5ஜி இணைப்புகளும் மற்றும் 200 மில்லியன் அளவிலான 5ஜி மூலம் இணைக்கப்பெற்ற கனெக்டெட் கார்களும் இருக்கும்.
இந்தியாவை பொறுத்தவரை, ஹூவாய் நிறுவனத்தின் 5ஜி கனவை நிஜமாக்க இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் உதவும். டெல்லியில், ஹவாய் மற்றும் ஏர்டெல் கூட்டணி ஏற்கனவே 5ஜி இணைப்புகளை அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2021 ஆம் ஆண்டில் 5ஜி ஸ்மார்ட்போன்களின் ஏற்றுமதி 110 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5ஜி சிப்களின் விலை புள்ளி அதிகமாக இருக்கும் என்பதால் 5ஜி திறன் ஆனது ஆரம்பத்தில் பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே இணைக்கப்படும்.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…