விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவிருக்கும் 5ஜி ஸ்மார்ட் போன்கள்!
5ஜி வசதியுடன் கூடிய மொபைல் போன்களை சாம்சங் மற்றும் எல்.ஜி. நிறுவனங்கள் தயாரித்துள்ளனர். சாம்சங் நிறுவனம் 4ஜி மற்றும் 5ஜி என இரண்டு மாடல்களில் தனது கேலக்ஸி எஸ்10 மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில், 5ஜி வசதியுடன் கூடிய ஸ்மார்ட் போன்களான கேலக்ஸி எஸ்10 மாடல் ஸ்மார்ட் போனானது வரும் ஏப்ரல் மாதம் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் 5ஜி இணையதள சேவை இன்னும் இந்தியாவில் அமலுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
.