550 கோடி இழப்பு ! 6,300 பேரை பணிநீக்கம் செய்யும் பேடிஎம்?

paytm layoffs

சென்னை :  தங்களுக்கு ஏற்ப்பட்ட நஷ்டம் காரணமாக பேடிஎம் நிறுவனம் ஊழியர்களை   பணிநீக்கம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பிரபல டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனமான பேடிஎம் இந்த ஆண்டு தொடர்ச்சியாக சரிவை கண்டு வருகிறது என்றே சொல்லலாம். குறிப்பாக, பேடிஎம் (Paytm) நிறுவனத்தின் தாய் நிறுவனமான “ஒன்97 கம்யூனிகேஷன்ஸ்” (One97 Communications) கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்தே வருவாயில் 2.60 சதவீத சரிவை கண்டது.

இப்படி பெரிய சரிவை கண்டதால் நிகர நஷ்டம் 550 கோடி ரூபாயாக அதிகரித்தும், வருவாய் 2,270 கோடியாக குறைந்தது. எனவே, செயல்பாடுகளை சீராக்குவதற்கும்,  செலவுகளைக் குறைக்க பேடிஎம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் முடிவை எடுத்தது. அதன்படி, கடந்த  டிசம்பரில் 1,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படும் இருந்தது. 

இதனை தொடர்ந்து, அடுத்த நடவடிக்கையாக 5,000 முதல் 6,300 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய “ஒன்97 கம்யூனிகேஷன்ஸ்” நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, பணியாளர்களைக் குறைப்பதன் மூலம் இந்த நிறுவனம் ரூ.400-500 கோடியை மிச்சப்படுத்துகிறது.

முதலீடுகள், முதன்மையான தொழில்நுட்பம், வணிகர் விற்பனை மற்றும் நிதிச் சேவைகள் ஆகியவற்றின் காரணமாக  ஊழியர்களின் செலவுகள் அதிகரித்துள்ள காரணத்தாலும், இப்படியே சென்றால் வரும் ஆண்டுகளில் பெரிய பாதிப்பு தங்களுக்கு ஏற்படும் எனவே செலவுகளை குறைக்க ஆட்களை குறைக்கும் நடவடிக்கையில் நிறுவனம்  ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சரிவை கண்டது பற்றி பேசிய பேடிஎம் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் (MD) விஜய் சேகர் ஷர்மா கூறுகையில், ” நான்காவது காலாண்டில் எங்களுக்கு ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக, எங்கள் வருவாய் மற்றும் லாபத்தில், கிட்டத்தட்ட சரிவை சந்தித்து இருக்கிறோம். பேடிஎம் வாலட் ஆகியவை இடைநிறுத்துவதால் ஏற்படும் நிலையான பாதிப்பும் இதில் அடங்கும்.

இதன் மூலம் சிறப்பாகவும், மீள்தன்மையுடனும் இருப்பதற்கு நாங்கள் நிறைய பாடங்களைக் கற்றுக்கொண்டோம். இன்னும் பல தயாரிப்புகளும் மறு உருவாக்கம் செய்யப்படும். அதற்கான வேலைகளும் தற்போது நடைபெற்றுவருவதை நான் சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்” எனவும் விஜய் சேகர் ஷர்மா  கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்