OnePlus 12: ஒன்பிளஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் மத்தியில் அதிகளவில் பேசப்படும் விதமாகவும், ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாகவும் அதன் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் ஓபனை, அக்டோபர் 19ம் தேதி மும்பையில் நடைபெற்ற நிகழ்வில் இந்தியா உட்பட உலகளவில் அறிமுகம் செய்தது.
இதற்கிடையில் மற்றொரு ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 12-ஐ வெளியிட தயாராகி வருகிறது. இந்நிலையில் அறிமுகத்திற்கு முன்னதாக, ஒன்பிளஸ் 12 இன் டிஸ்பிளே மற்றும் ஸ்டோரேஜ் குறித்த விவரங்கள் கசிந்துள்ளன. தற்போது, டிப்ஸ்டர் டிஜிட்டல் சேட் ஸ்டேஷன் ஆனது இந்த ஸ்மார்ட்போனின் சார்ஜர் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
டிஸ்பிளே
முன்னதாக வெளியான டிஜிட்டல் சேட் ஸ்டேஷனின் படி, 3168×1440 பிக்சல்கள் ஹைரெசல்யூஷன் கொண்ட 6.82 இன்ச் கர்வ்டு ஓஎல்இடி டிஸ்ப்ளே ஆனது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் உள்ளது. இந்த கர்வ்டு டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2,600 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டுள்ளது. நீர் மற்றும் தூசிகளில் இருந்து பாதுகாக்க ஐபி68 ரேட்டிங் உள்ளது.
பிராசஸர்
அட்ரினோ 750 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் ஆனது ஒன்பிளஸ் 12 இல் பொருத்தப்படலாம். ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்டையாகக் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் ஆக்ஸிஜன் ஓஎஸ் 14 உள்ளது.
அதோடு இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உள்ளது. ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் இன்ஃப்ராரெட் ரிமோட் கண்ட்ரோல் அம்சம் உள்ளது. இதை வைத்து ஸ்மார்ட்போன் மூலம் டிவி மற்றும் ஏர் கண்டிஷனர்கள் போன்ற பல்வேறு மின்னணு சாதனங்களைக் கட்டுப்படுத்த முடியும்,
கேமரா
இதன் கேமராவைப் பொறுத்தவரையில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுடன் கூடிய சோனி IMX96 சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா, சோனி IMX581 சென்சார் கொண்ட 48 எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 3X ஆப்டிகல் ஜூம், 6X சென்சார் ஜூம் மற்றும் 120X டிஜிட்டல் ஜூம் கொண்ட 64 எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா பொருத்தப்படலாம்.
பேட்டரி
ஒன்பிளஸ் 12 பேட்டரியை பொறுத்தவரையில் 5,400 mAh திறன் கொண்ட லித்தியம் பாலிமர் பேட்டரி பொருத்தப்படலாம். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய யுஎஸ்பி டைப்-சி போர்டுடன் கூடிய 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை கொண்டிருக்கலாம். ஒன்பிளஸ் 12 ஆனது யுஎஸ்பி 3.2 ஆதரவுடன் வரும் என்று கூறப்படுகிறது.
ஸ்டோரேஜ்
கருப்பு, பச்சை மற்றும் வெள்ளை ஆகிய மூன்று வண்ணங்களில் ஒன்பிளஸ் 12 ஆனது 16ஜிபி வரை எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் மற்றும் 256 ஜிபி யுஎஃப்எஸ் 4.0 இன்டெர்னல் ஸ்டோரேஜைக் கொண்டிருக்கலாம். இந்த ஸ்மார்ட்போனை ஒன்பிளஸ் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், நாளை (அக்டோபர் 24ம் தேதி) புதிய மொபைல் போன் டிஸ்பிளேவை அறிமுகம் செய்யவுள்ளது. அதன்படி, ஒன்பிளஸ் மற்றும் ஒப்போ ஆகியவை BOE உடன் இணைந்து இந்த டிஸ்பிளேவை அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த புதிய டிஸ்ப்ளே 2K ரெசல்யூஷன் மற்றும் 3,000 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டடுள்ளதாக கூறப்படுகிறது. இது அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அடுத்ததாக வரவிருக்கும் ஒன்பிளஸ் மற்றும் ஒப்போ ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…